Thursday, January 10, 2013
சிவபெருமானை பிரதோஷ காலத்தில் வழிபடுவது எப்படி?
பிரதோஷ வரலாறு: இந்திராதி தேவர்கள், திருப்பாற்கடலை அடைந்து பாற்கடலைக் கடைய முயன்றார்கள். மந்திரகிரியை மத்தாகவும், சந்திரனைத் தறியாகவும் வாசுகி என்ற நாக ராஜனைத் தாம்புக் கயி றாகவும் அமைத்தார்கள். திருமால் கூர்மமாகி மந்திரகிரி யைத் தனது முதுகில் தாங்கினார். அசுரர்கள் தலைப் புற மும் தேவர்கள் வால்புறமும் நின்று கடையலானார் கள். அந்த நாள் தசமி திதி. அன்று ஒரு வேளையுண்டு திருப்பாற் கடலைக் கடைந்தார்கள். மறுநாள் ஏகாதசி பதினோராவது திதி. பாற் கடலைக் கடைந்தபோது வாசுகி வருத்தங்தாங்காது பதைபதைத்து நஞ்சை உமிழ்ந்தது. கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. வாசுகி கக்கிய ஆலமும், கடலில் தோன்றிய ஆலமும் ஒன் று சேர்ந்து ஆலா லம் எனப்பேர் பெற்றது. இந்த ஆலாலம் மிக்க பயங்கரமாக, வெப்பமுடன் உல கத்துக்கே முடிவு செய வது போல் விண்ணவரை விரட்டியது. வலமாகவும், இடமாக வும் மறித்துத் துரத்தியது. திசை தோ றும் தேவர்கள் நடுங்கி ஒடுங்கி ஓடினார்கள். வெண்ணிறமாக இருந்த விஷ்ணுமூர்த்தி விஷ வேகத்தால் நீலநிறம் ஆனார். வானவர்கள் அஞ்சித்திரு க்கயி லாஞ் சென்று சிவனாரிடம் அடைக்கலம் புகுந்தார்கள்.
தஞ்சம் புகுந்த வானவர்கள் தேவ தேவ மஹாதேவ அருட்க டலே! கருணைக் குன்றே! தேவரீர் ஆண்டவர்! நாங் கள் அடிமைகள், தேவரீர் உடையவர். நாங்கள் உடை மைகள். நாங்கள் பாற் கடலைக் கடைந்தோம். அந்த விவசாயத்தில் முத லில் விளைந்தது. தேவரீ ருக்கு உரியது என்று கூறி முறையிட்டார்கள். ஓல மிட்ட வண்ணம் இடமாக வும், வலமாகவும், இடவலமாகவும் அவர் சன்னதி முன்னுற்ற நந்திதேவரது அண்டத்தில் ஒளிந்தன ர். அண்ட சராசரங்களும் சகல தேவர்களும் சிவபெருமானை ஏகச்சிந்தனையாகத் தங்க ளைத் காத்தருளக் கோரித்து தித்த நேரமே பிரதோஷ கால நேரமாகும். கருணையே வடி வான கண்ணுதற் கடவுள் தம து அருகில் நிற்கும் சுந்தரரைப் பார்த்து சுந்தரா அவ்விடத்தை இவ்விடத்துக்குக் கொணர்வா ய் என்று பணித்தருளினார். சுந்தரர் மாலயனாதிவானவர் களால் அணுக முடியாத அதி பயங்கரமான கொடிய விஷத்தை நாவல்பழம் போலத் திரட்டி உருட்டிக்கொணர்ந்து சிவபெருமானிடம் தந்தார். கருணா மூர்த்தியான சிவபெருமான் நந்திதேவரின் கொம் பின் நடுவில் தோன்றி அக்கொடிய விடத் தை அடியவர்களாகிய அமரர் கள் உய்ய அமுதம் போல் உண்டு அருளினார். அந்த வி டம் உள்ளே சென்றால் உள்மு கத்தில் உள்ள ஆருயி ர்கள் அழிந்து விடும். ஆதலால் உண் ணாமலும், உமிழாமலும் கண்டத்தில் தரித் தருளினார். அதனால் செம்மேனி எம்மானு டைய கண்டம் கரியதாயிற்று. அதனால் மணிகண்டர் என்று பேர் பெற்றார். இது கார்த்திகை மாதச் சனிப்பிரதோஷ கால மாகும். இக்கதை கடம்பவன புராணமென்னும் மதுரை ஸ்தல புராணத்தில் உள்ளதாகும்.
சிவபெருமானுடைய கருணைக்கு உதாரணம் இது ஒன்று போதாதா? என்று நாலம் வா என்று ஒரு பாட லை ஆதிசங்கரர் சிவானந்தல கரியில் பாடியருளினார். இவ்வாறு எம்பெருமான் நஞ்சுண்டருளிய கரு ணைத் திறத்தை நால்வர்களும் மற் றைய ஆன்றோர்களும் புகழ்ந்து கூறியிருக்கிறார்கள். இறைவன் ஆலால விஷத்தை உண்ணவில் லையானால் பிரம விஷ்ணு இந்தி ராதி தேவர்கள் அன்றே மாண்டிருப்பார்கள். எல்லோரு டைய கண்டத்தையும் எந்தைபிரான் கண்டந்தீர்த்தது. மாலெங் கே? வேந்தனுயர் வாழ்வெங்கே? இந்திரன் செங்கோலெங்கே? வா னோர் குடியெங்கே? கோலஞ் செய் அண்டங்கள் எங்கே? எந்தை பிரான் கண்டமங்கே நீலமுறாக்கால்? என்கிறார் வடலூ ர் வள்ளலார்.
பரவி வானவர் தானவர் பலரும்
கலங்கிட வந்த விடம்
வெருள உண்டு கந்த
அருள் என் கொல்? விண்ணவனே
கரவின் மாமணி பொன் கொழித்திழி
சந்து காரகில் தந்து பம்பை நீர்
அருவி வந்தலைக்கும்
ஆமாத்தூர் அம்மானே – திருஞானசம்பந்தர்
இந்த விடத்தின் வெம்மையால் திருமால் நீலநிறம் பெற்றார். அதற்கு முன் அவர் வெண்ணிறமுடன் இருந்தார் என்பதைப் பின் வரும் பாடலால் அறிக.
மலை வளர் சிறகு கண்டேன்
வாரிதி நன்னீர் கண்டேன்
சிலை மதன் உருவு கண்டேன்
சிவன் சுத்த களம் கண்டேன்
அலை கடல் கடையக் கண்டேன்
அயன் சிரம் ஐந்துங் கண்டேன்
சிலை எரிஇரு கண் கண்டேன்
கொடுத்ததை வாங்கக்கண்டேன்
இந்தக்கருத்தை வலியுறுத்தும் வடமொழிப் பாடல் ஒன்று காண்க.
இந்த்ரம் த்வயஷம் அமந்த
பூர்வ முதிதம் பஞ்சானனம் பத்மஜம்
வார்திம் சுத்த ஜலம் சிவம் சித களம்
லட்சுமிபதிம் பிங்களம்
சைலான் பகூகதரான ஹயான பிததா
காமஞ்ச சத்விக்ரகம்
சர்வம் த்ருஷ்டம் இதம்மயா ரகுபதே
தத்தா பஹாரம் விநா
இவ்வாறு தேவர்கள் பொருட்டு சிவபெருமான் ஆலால விஷ த்தை உண்டருளியது ஏகாதசி மாலை நேரமாகும்.
மீண்டும் பாற்கடல் கடைந்தது: சிவ பெருமான் தேவர்களை நோக்கி மீண்டும் சென்று திருப்பாற் கடலை க் கடையுமாறு பணித் தருளினார். அமரர்களும் அசுரர்களும் மீண்டும் கடலருகில் சென்று நின்று முன் போலவே கடலைக்கடையத் தொட ங்கி னார்கள். பாற்கடலிருந்து இலக் குமி, ஐராவதம், காமதேனு, கற்பக த்தரு, சிந்தாமணி, கௌஸ்துபம ணி, சூடாமணி, உச்சை ச்ரவம் முத லியன ஒவ்வொன்றாகத் தோன் றின. இலக்கு மியைத் திருமால் ஏற் றுக்கொண்டார். ஏனைய பொருட் களை இந்திராதி தேவர்கள் அடைந்தார்கள். ஏகாதசியாகிய அன்று இரவு முழுவதும் உறக்கம் இன்றி பாற்கடலைக் கடைந்தார்கள். மறுநாள், துவாதசியன்று அதிகாலையில் அமிர்தம் தோன் றியது. அதனை, தேவர்கள் பகிர் ந்து உண்டார்கள். அமிர்த ம் உண்ட அவர்கள் அந்த மகிழ்ச்சியினால் துவாத சியன்று ஆடி யும் பாடியும் பொழுதைப் போக்கினா ர்கள்.
பிரதோஷம்: மறுநாள் திர யோதசி பதிமூன்றாம் நாள் தேவர்கள் சிவபெருமானை முன்னாலே வணங்காது பொ ழுது போக்கிய தங்கள் குற்றத்தை உணர்ந்து சிவபெருமானிடம் பணிந்து தங்கள் குற்றத்தை மன்னித்தருளுமாறு வேண்டினார் கள். பரம கருணாநிதியாகிய சிவபெருமான் மகிழ்ந்து தே வர்களுக்கு அருள் புரியத் திருவுளம் கயிலையில் அன்று மாலை (4.30 மணி முதல் 6.00 மணி வரை ) பிரதோஷ வேளை யில் சிவ பெரு மான் தம் கையில் டமருகம் ஏந்தி, சூல த்தைச் சுழற்றி, நந்தி தேவ ரின் இரண்டு கொம்புகளிடையே ஒரு யாமம் நடன மாடினார். தருமதேவதையே நந்தியாக உள்ளார். கலை மகள் வீணை வாசிக்க, திருமகள் பாட, இந்திரன் புல்லாங்குழல் ஊத, பிரமன் தாளமிட, திருமால் மிருதங்கம் வாசிக்க, சிவபெரு மான் தாண்டவமாடி னார். ஆலகால நஞ்சை, ஆலால சுந்தரர் கையில் எடுத்து வந்து பிரதோஷ வேளையில் நந்தி தேவரின் கொம்புகளு க் கு இடை வழியாக ஈசனி டம் கொடுத்தார். அவர் அதை வாங்கி, உண்டு நடன மாடினார். தேவர்கள் அதனைத் தரிசித்து சிவ பெருமானைத் துதி செய்து வணங்கினார்கள்.
அது முதல் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களி லும் வரும் திரயோதசி திதியில், சூரியன் மறைவதற்கு முன் உள்ள நேரமாகிய மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள பிரதோஷ நேரம் பாபத்தைப்போக்கும் நேர மாயிற்று. அமிர்தம் வேண்டி அசுரர்களும் தேவர்களும் பாற் கடலைக் கடைந்த போது ஆலகால நஞ்சு தோன்றி அனைவ ருக்கும் பெருந் தொல்லை உண்டாக்கிய காலம். சிவன் அதை உண்டு, ஒரு வருக்கும் தீங்கு ஏற் படாது காப்பாற்றிய காலம். சகல தேவதை களும் சிவசந்நிதியில் கூடி, ஈசனை வழிபடும் கா லம். தங் க ளைக் காக்க எல்லாரும் ஈசனை வேண்ட, அவர்கள் துன்பம் நீங்கி மகிழ, சிவபெருமான் ஆனந்தத் தாண் டவமாடிய காலம்.
ஈசனை வழிபட மிகச் சிறந்த காலம் பிரதோஷ காலம்.
சிவன் ஆலால விஷத்தை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என மிகவும் சிறப்புடையதாகும்.
தோஷம் என்றால் குற்றம்; பிரதோஷம் என்றால் குற்றமில் லாதது என்று பொருள். எனவே, குற்றமற்ற இந்தப் பொழுதில் இறைவனை வழிபடுவதால் நம்முடைய தோஷங்கள் நீங்கும் என்றும் ஆன்றோர்கள் கூறுவர். இரவும் பகலும் சந்திக்கும் நேர த்துக்கு உஷத் காலம் என்று பெயர். இந்த வே ளையின் அதி தேவதை சூரியனின் மனைவி உ ஷா தேவி. அதேபோல் பகலும் இரவும் சந்திக் கும் நேரம் பிரத்யுஷத் கா லம் இதன் அதி தேவதை, சூரியனின் மற்றொரு தேவியாகிய பிரத்யுஷா. அவள் பெயரால் இது பிரத்யுஷத் காலம் எனப்பட்டு, பேச் சுவழக்கில் பிரதோஷ காலம் ஆனதாகச் சொல்வர்.
பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பல வித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ் டிப் போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிர தோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட் ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பி க்கை. அலுவலகத்தில், பணி யில் இருப்ப வர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.
ஐந்து வகைப் பிரதோஷம் : 1. நித் தியப் பிரதோஷம்: தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழி கைக்கு (72 நிமிடம்) முன் னர் உள்ள காலகட்டத்தை இது குறிக்கும்.
2. பட்சப் பிரதோஷம்: இது வளர் பிறைத் திரயோதசியன்று வரு ம்.
3. மாதப் பிரதோஷம்: இது தேய்பிறைத் திரயோதசி யன்று வரும்.
4. மகா பிரதோஷம்: சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் சனிக்கிழமை கூடிய திரயோதசி நாளன்று இது வரும். (ஆலகால நஞ்சை ஈசன் ஏற்றருளியது கார்த்திகை மாத ம் சனிப் பிரதோஷத்தன்று என்று கருதப்படுகிறது. இதற்கு மாறாக, ஆந்திராவில் வை காசி மாதம் சனிப் பிரதோஷ வேளை யென்று கருதுகிறா ர்கள்.)
5. பிரளயப் பிரதோஷம்: இது பிரளய காலத்தில் வருவது. அப்போது எல்லாமே ஈசனுள் அடங்கும்.
பிரதோஷ காலத்தில் சிவபெருமானை வழிபடுவது எப்படி?
பிரதோஷ வேளையில் ஈசனை வழிபட அனைத்தும் சித்தி க்கும். இக்காலத்தில் நந்தி தேவரை வழிபடுவது சிறப்பாகும்.
வலம் வருதல் : சாதாரண நாளில் சிவசந்நிதியை மூன்று முறை வல ம் வர வேண்டும். ஆனால் பிர தோஷ காலத்தில், சோம சூத்திரப் பிரதட்சணம் செய்ய வேண்டும் சோமசூத்தகப் பிரதட்சிணம் என்பது முதலில் சிவலிங்கத்தையும், நந்தி யையும் வணங்கிக் கொண்டு அப் பிரதட்சணமாக (தட்சிணாமூர்த்தி சன்னதி வழியாக) சண்டேசுவரர் சன்னதி வரை சென்று அவரை வண ங்கிக் கொண்டு, அப்படியே திரும்பி வந்து, முன்போல் சிவ லிங்கத் தையும், நந்தியையும் வணங்கிக் கொண்டு, வழக்கம் போல் அப்பிரதட்சணமாக ஆலயத்தை வல ம் வரவேண்டும். அப்படி வலம் வரும் பொழுது சுவாமி அபி ஷேக தீர்த்தம் வரும் தொட்டியை (கோமுகத்தை) கடக்காமல் அப்படியே வந்த வழியே திரும்பி, அப்பிரதட்சணமாக சன்ன திக்கு வந்து சிவ லிங்கத்தையும், நந் தியையும் வணங்க வேண்டும். இப் படி மூன்று முறை வரவேண்டும். இது அநேக அசுவ மேதயாகம் செய்த பலனைத் தரும் என சான்றோர் கூறி யுள்ளனர். அந்தந்த திசாபுத்திகள் நடைபெறுபவர்கள் அந்தந்த கிழமை களில் வரும் பிரதோஷத் தன்று இறைவனை இவ்வாறு வலம் வரு வதால் இன்னல்கள் நீங்கி நன் மைகள் பெறுவர்.
பிரதோஷம் விளக்கும் கோட்பாடு: உலகில் பிரதிகூலமாக இருப்பவை களை அனுகூலமாக மாற்றத் தெரி ந்து கொள்ள வேண்டும். அழிவைத் தரும் ஆலகால நஞ்சை யுண்டு நம்மைக் காத்த சிவதாண்டவம் இக்கோட்பாட்டை விள க்கும் வகையில் அமைந்துள்ளது. பிரதோஷ காலத்தில், சிவனை வழிபட்டு, இம்மை மறுமை நலன்களை நாமெல் லோரும் பெறுவோமாக !
விரதம் அனுஷ்டிக்கும் முறை: வளர்பிறை தேய்பிறை என்ற இர ண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று அதிகாலை யில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும் உண வின்றி உபவாசம் இருக்கவேண்டும். திரு முறைகளை ஓத வேண்டும். பிரதோஷ நேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சி வாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெ ழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும். வசதி உள்ள வர்கள் சுவாமிக்கும் அம்பி கைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தல் அவசியமாகும்.
பிரதோஷ பூஜை அன்று முக்கிய அபிஷேகப் பொருட்களும் பல னும்
1. அபிஷேக வேளையில் பால் கொடுத்தால் – நோய் தீரும், நீண்ட ஆயுள் கிடைக்கும்
2. தயிர் கொடுத்தால் – பல வளமும் உண்டாகும்
3. தேன் கொடுத்தால் – இனிய சாரீரம் கிட்டும்
4. பழங்கள் கொடுத்தால் – விளைச்சல் பெருகும்
5. பஞ்சாமிர்தம் தந்தால் – செல்வச் செழிப்பு ஏற்படும்
6. நெய் கொடுத்தால் – முக்திப் பேறு கிட்டும்
7. இளநீர் தந்தால் – நல்ல மக்கட்பேறு
8. சர்க்கரை கொடுத்தால் – எதிர்ப்புகள் மறையும்
9. எண்ணெய் தைலம் கொடுத்தால் – சுகவாழ்வு
10. சந்தனம் கொடுத்தால் – சிறப்பான சக்திகள் பெறலாம்
11. மலர்கள் கொடுத்தால் – தெய்வ தரிசனம் கிட்டும்
பிரதோஷ பூஜையின் மகிமைகள்
மனிதர்களாகிய நாம் எத்தனை தோஷங்களுடன் ஜென்மம் எடு த்துள்ளோம் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் பிரதோஷ உபாசனையால் அத்தனை தோஷங்களையும் போ க்கிக் கொள்ள முடியும். எனவே பிரதோஷ பூஜை செய்து நன்மை பெறலாம்.
பிரதோஷ பூஜை செய்தால் ஒருவருக்குக்கிட்டும் பலன்கள்
1. துன்பம் நீங்கி – இன்பம் எய்துவர்.
2. மலடு நீங்கி – மகப்பேறு பெறுவர்
3. கடன் நீங்கி – தனம் பெறுவர்
4. வறுமை ஒழிந்து – செல்வம் சேர்ப்பர்
5. நோய் நீங்கி – நலம் பெறுவர்.
6. அறியாமை நீங்கி – ஞானம் பெறுவர்
7. பாவம் தொலைந்து – புண்ணியம் எய்துவர்
8. பிறவி ஒழித்து – முக்தி அடைவர்
மஹா பிரதோஷம்: ஐந்து வருட பலன் சனிக்கிழமையில் வரும் பிரதோஷ வேளையில் நாள் முழுவதும் உபவாசம் இரு ந்து சிவாலயத்திற்கு சென்று இறைவழிபாடு செய்தால் 5 வரு டம் தினமும் தவறாமல் ஆலய வழிபாடு செய்த பலன் கிடை க்கும். அது மட்டுமில்லாமல் யார் ஒருவர் பஞ்சமா பாதகம் அதாவது மது, மங்கை, கொலை, கொள்ளை, பொய் இவைகள் செய்கின்றார்களோ அவர்களுக்கு மஹாபாதகம் ஏற்படும். இந்த மஹா பாதகத்தை சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ பூஜை அன்று கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டால் இந்த பஞ்சமா பாதகம் விலகும்.
பலன்கள்: ஒரு வருட பலன் சனிக்கிழமை தவிர மற்ற கிழமை களில் வரும் பிரதோஷ தினத்தன்று பிரதோஷ வேளையாகிய மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் அன்று முழுவதும் உப வாசம் இருந்து சிவாலயத்திற்குச் சென்று ஆலய வழிபாடு செய் தால் ஒருவருக்கு ஒரு வருடம் தினமும் ஆலயம் சென்று வழி ப்பட்ட பலன் கிட்டும்.
தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! .அரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையார போற்றி போற்றி!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment