புண்ணீயம் சம்பாதிக்கும் வழி!
திருஞானசம்பந்தர் தேவாரம்
தலம் : திருச்சாய்க்காடு
பண் : சீ காமரம்
இரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்பப் புகழ் நாமஞ் செவி கேட்ப
நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.
திருச்சிற்றம்பலம்
பொருளுரை
நன்னெஞ்சமே, நீ நித்தலும் எம்பெருமானை நினை!
(ஏனெனில்) யாரே அறிவார் சாகின்ற நாளும்,
வாழ்கின்ற நாளும் எவையென்று?
திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம்பெருமாற்குப்
பூவினை நித்தலும் தலை சுமக்கவும்,
புகழ் நாமங்களைக் காது கேட்கவும்,
நாக்கானது நித்தலும் சொல்லிப் பரவவும்
நல் வினையைப் பெறலாம்.
No comments:
Post a Comment