Saturday, January 19, 2013
திருவையாறு திருப்புகழ்!!
திருவையாறு திருப்புகழ்
அருணகிரிநாதர்
சொரியு மாமுகிலோஇருளோ குழல்
சுடர்கொள் வாளிணையோ பிணையோ விழி
சுரர்தம் ஆரமுதோ குயிலோ மொழி இதழ்கோவை
துவரதோ இலவோ தெரியா இடை
துகளிலாவனமோ பிடியோ நடை
துணைகொள் மாமலையோ முலை தானென உரையாடிப்
பரிவினால் எனை ஆளுக நானொரு
பழுதிலான் எனவாணுத லாரொடு
பகடியே படியா வொழியாஇடர் படுமாயப்
பரவி மீதழியா வகைஞானிகள்
பரவுநீள் புகழேயது வாமிகு
பரமவீடது சேர்வது மாவது மொரு நாளே
கரிய மேனியனானிரை யாள்பவன்
அரிய ராவணை மேல்வளர் மாமுகில்
கனகன் மார்பது பீறிய வாளரி கனமாயக்
கபடன் மாமுடியாறுடனாலுமொர்
கணையினால் நிலமீதுற நூறிய
கருணை மால்கவி கோப க்ருபாகரன் மருகோனே
திரிபுராதிகள் தூளெழ வானவர்
திகழவே முனியாவருள் கூர்பவர்
தெரிவை பாதியர் சாதியிலாதவர் தருசேயே
சிகர பூதர நீறுசெய் வேலவ
திமிர மோகர வீர திவாகர
திருவையாறு உறை தேவ க்ருபாகர பெருமாளே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment