ஸ்தல வரலாறு
திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. 108 திவ்விய தேசங்களில் ஒன்று, பஞ்ச கமல தலங்களில் ஒன்று என புராணப் பெருமைகள் பல கொண்ட அற்புதமான ஆலயம் இது. ஸ்ரீபிரம்மாவின் சிரசைக் கொய்ததால் விளைந்த சாபத்தில் இருந்து விடுபடுவதற்காக சிவபெருமான் இங்கு தவமிருந்தார். அவரின் சாபத்தை திருமால் போக்கி அருளினார்.
எனவே இந்தத் தலத்து பெருமாளுக்கு, ஸ்ரீஹர சாப விமோசனப் பெருமாள் எனும் பெயர் உண்டானது. தாயாரின் திருநாமம் - ஸ்ரீகமலவல்லித் தாயார், தாயாருக்கு வெள்ளிக்கிழமை தாமரைப் பூக்கள்சார்த்தி, பாயச நைவேத்தியம் செய்து வணங்கிளால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும். ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஅனுமன், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஆகியோர் தன்சந்நிதிகளில் அருள்கிறார்கள்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறும். தொடர்ந்து 11 வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம். ஆனி மாத சித்திரை நட்சத்திர நாளில், ஸ்ரீசுதர்சன வழிபாடு இங்கு வெகு விமரிசையாகக் கெண்டாடப்படுகிறது.
இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீசக்கரத்தாழ்வாரை மனமுருகப் பிரார்த்திக்க வீட்டில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். நல்ல வேலை கிடைக்கவில்லையே என வருந்துவோர் திருமணம் கைகூடவில்லையே என்று ஏங்குவோர், வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் (தொடர்ந்து 16 வாரங்கள்) இந்தத் தலத்துக்கு வந்து முல்லைப் பூமாலை சார்த்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால், விரைவில் நல்ல உத்தியோகம் கிடைக்கும்.
நல்ல வரன் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புதன் மற்றும் சனிக்கிழமைகளில், ஸ்ரீஹரசாப விமோசன பெருமாளுக்கு தாமரை தலர்கள் சார்த்தி, ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால்.. குடும்பத்தில் நிலவுகிற பிரச்சினைகள் உடனே நீங்கிவிடும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். அமாவாசை நாளில் இங்கு வந்து நெய் தீபமேற்றி வணங்கிளால், தோஷங்கள் நீங்கி, தோஷம் பொங்க வாழ்வார்கள் என்பது உறுதி.
No comments:
Post a Comment