Menu

Thirupathi Seva Online Live

Wednesday, June 5, 2013

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்

கோவில் வரலாறு

திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில்
          தஞ்சை மாவட்டம் திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இங்கு தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு வருடம் தோறும் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் நாடு முழுவதும் இருந்து ஏராளமாகன பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 


இந்த ஆண்டு குரு பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன்பெற வேண்டி லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிப் பின் தோன்றின. 

ஆனால் அந்த பேரூழிக்காலத்திலும் அழியாத பெருமை உடையது திட்டை ஸ்தலம். கைலாசம் கேதாரம், காசி, ஸ்ரீ சைலம், காஞ்சி. சிதம்பரம் போன்ற சுயம்பு தலங்களில் வரிசையில் இருபத்தி இரண்டாவது சுயம்புத்தலமாக விளங்குவது திட்டை. பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது. 

மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு நீர் சூழ்ந்தும், இருள் கவிந்தும், இருந்த இந்தப் பிரமாண்ட உலகத்தைக் கண்டு அஞ்சினர். பரம்பொருளை பலவாறு வேண்டி துதித்தனர். அப்போது பார்வதி பரமேஸ்வரனின் அருளாள் ஊழிப்பெரு வெள்ளத்தின் நடுவில் நீண்ட பரப்பளவுள்ள ஒரு மேட்டுப் பகுதியை கண்டு வியந்தனர். 

அம்மேட்டுப்பகுதியில் ஜோதிமயமான ஒரு சிவலிங்கம் தரிசனம் அளித்தது. அதனை மும்மூர்த்திகளும் கண்டு அதிசயித்து பூஜித்தனர். இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்து அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, வேதாந்த சாஸ்திர அறிவையும் அருளினார். 

இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை ஆகும். இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலை சிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார். 

இத்திருக்கோவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதியின் விமானத்தில் சந்திர காந்தக்கல், சூரிய காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இக்கற்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து வேதிவினை ஏற்பட்டு 24 நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகின்றது. இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாது.

No comments:

Post a Comment