Menu

Thirupathi Seva Online Live

Monday, January 21, 2013

கண்ணகை அம்மன் கோவில் – வரலாறு




கண்ணகை அம்மன் கோவில் – வரலாறு (அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள்)


         மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பூவரசு) ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாக விளங்குவது கண்ணகையம்மாள் என வழங்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகும்.

இவ்வாலயம் புங்குடுதீவு தெற்குக் கடற்கரை மணற்பரப்பில் ஏறக்குறைய ஆயிரம் பரப்பு நிலத்தில் அமைந்துள்ளது. வேண்டுவார் வேண்டுவதை வழங்கி அருள்புரியும் அன்னையாம் கண்ணகையம்மன் கோவில் கொண்டுள்ள இவ்வாலயத்தின் சிறப்பு சொல்லில் அடங்காததாகும். 1931 ம் ஆண்டு இக்கோயில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று, இக்கோயிலின் முதல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இக்கோயிலின் கருவறையில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாளும், இரண்டாம் மண்டபத்தில் வடக்குப் புறத்தில் தெற்கு முகமாக, தெற்கு வாசலின் ஊடாகச் சமுத்திரத்தை நோக்கியபடி ஸ்ரீ கண்ணகி அம்பாளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.1944 ம் ஆண்டு இக்கோயிலின் இரண்டாவது கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

வல்லன்பதி இலுப்பண்டைநாச்சியார் ஆலயத்தின் புளியமரத்தில் பள்ளி கொண்டிருக்கும் நாகபாம்பு கண்ணகியம்மன், நயினை நாகபூஷணியம்மன், புளியங்கூடல் முத்துமாரியம்மன் ஆலய உற்வச காலங்களில் அம்மனுக்கு வாயினால் பூ எடுத்துச் செல்வதாக கண்ணால் கண்டவர்கள் கூறுகின்றனர். 1957 ம் ஆண்டு சுண்ணாம்பு கட்டிடம் முழுவதும் அழிக்கப்பட்டு நிரந்தர கட்டிடம் அமைக்கப்பட்டு, 1964 ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

1957 ம் ஆண்டு புதிய ராஜகோபுரம் மற்றும் சித்திரத்தேர் பணிகள் நடைபெற்றன. வரலாற்று சிறப்பு மிக்க சிலப்பதிகாரப் பெருவிழா நடத்தப்பட்ட சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு. கண்ணகி அம்பாளின் தேர்த்திருவிழாவான சித்திரா பவுர்ணமி தினத்தில் கனடாவிலுள்ள ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்திலும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.    

ஆல‌ய‌ அமைப்பு

இவ்ஆல‌ய‌மும் ஏனைய‌ ஆல‌ய‌ங்க‌ளைப்போல‌வே ஆக‌ம‌ விதிமுறைப்ப‌டி அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. க‌ருவ‌றைக்கு மேலே அழ‌கிய‌ விமான‌ம் க‌ண்ண‌கி வ‌ர‌லாற்றுச்சிற்ப்ங்க‌ளோடு அமைந்துள்ள‌து. இதைவிட‌ க‌ண்ண‌கியின் வ‌ர‌லாற்றைக்கூறும் ஓவிய‌ங்க‌ள் ஆல‌ய‌ உள் வீதியில் அழ‌குற‌ வ‌ரைய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ப‌ரிவார‌ மூர்த்திக‌ளாக‌ பிள்ளையார், முருக‌ன், வைரவ‌ர் என உள் வீதியில் த‌னித்த‌னி ஆல‌ய‌ங்க‌ள் உள்ள‌ன‌.

No comments:

Post a Comment