Menu

Thirupathi Seva Online Live

Monday, January 7, 2013

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் தெப்பத்திருவிழா

மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோவில் தெப்ப உற்சவ விழா வருகிற 15-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது.

விழா நாட்களில் காலை, மாலையில் சித்திரை வீதிகளில் சுவாமி உலா நடைபெறும். இவ்விழாக்களில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 27-ந்தேதி அன்று தெப்ப திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் திருக்கோவிலில் இருந்து புறப்பாடாகி கீழவாசல், காமராஜர் சாலை வழியாக தெப்பக்குளத்திற்கு சென்று எழுந்தருளுகிறார்.

அங்கு முத்தீஸ்வரர் திருக்கோவில் சுவாமி, அம்மன் எழுந்தருளிய பிறகு தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் தெப்பத்தில் எழுந்தருளுகிறார்கள். அதன் பின்னர் தெப்பத்தை சேவார்த்திகள் வடம் பிடித்து இழுக்க காலையில் இருமுறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு சுவாமியும், அம்மனும் காட்சி அளிப்பார்கள். அன்று மாலையில் மீண்டும் தெப்பத்தில் வலம் வரும் சுவாமி, அம்மன் அங்குள்ள மைய மண்டபத்திற்கு சென்று எழுந்தருளுகிறார்கள்.

இந்த தெப்ப திருவிழாவின்போது வான வேடிக்கை உள்பட பல நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தெப்ப திருவிழா அன்று கோவிலில் இருந்து சுவாமிகள் புறப்பாடாகி சென்றதில் இருந்து மீண்டும் கோவிலுக்கு திரும்பி வந்து எழுந்தருளும் வரை கோவில் நடைசாத்தப்பட்டு இருக்கும். எனவே உற்சவ நாட்களில் தங்க கவசம், வைரக்கிரீடம் சாத்துபடி, தங்க ரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறாது.

No comments:

Post a Comment