திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியப்பகுதி திருநெல்லிப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள கொப்பனார்பட்டி என்ற கிராமத்தில் மும்முர்த்தி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலம் அருகே ஒரு வேப்பமரம் உள்ளது. இந்த வேப்பமரம் அருகே தான் வருடம்தோறும் மார்கழி மாதங்களில் மேல்மருவத்துர் ஆதிபராசக்தி கோவிலுக்கு மாலை அணிவது வழக்கம். அப்போது வேப்பமரத்தில் பால் வடிவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் மார்கழி மாதத்தில் மேல் மருவத்துர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு மாலை அணிந்தனர். மாலை அணிந்த நாள் அன்று அந்த வேப்பமரத்தில் திடிரென பால் வடிய தொடங்கியது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடி வருடந்தோரும் மாலை அணியும் நாள் அன்று பால் வடிவதால் ஆதிபராசக்தி அருள்பாலிக்கிறார் என்று சிறப்பு பூஜைகள் நடத்தி ஏராளமானோருக்கு அன்னதானம் வழங்கியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
வேப்பமரத்தில் பால் வடியும் செய்தி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வேப்பமரத்திற்கு வந்து பயபக்தியுடன் சாமி கும்பிட்டு, பால் வடிவதை பார்த்து ஆச்சரியத்துடன் செல்கின்றனர்.
No comments:
Post a Comment