Menu

Thirupathi Seva Online Live

Tuesday, March 5, 2013

திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில்


திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில்
கோவில் வரலாறு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. மலையின் மேல் அமைந்துள்ள இந்த கோவிலில் சீனிவாச பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாணத்திற்கு திருப்பதியில் இருந்து வெங்கடாஜலபதி வந்து வாழ்த்தினார்.

திருமணம் முடிந்த பின்பு ஆண்டாளின் பிரார்த்தனைக்கு இணங்க தென் திருப்பதி என அழைக்கப்படும் திருவண்ணாமலை கோவிலில் திருமலை திருப்பதியில் காட்சியளிப்பது போல அழகே உருவாய் நின்ற கோலத்தில் சீனிவாச பெருமாளாக அருள்புரிவதாக ஐதீகம். இந்த கோவில் முக்கியமாக பிரார்த்தனைகளை நிறைவேற்றும் தலமாக விளங்கி வருகிறது.

கால் ஆணி மற்றும் இதர கால் நோயால் அவதிப்படுபவர்கள் பெருமாளுக்கு தங்கள் காலணிகளை (செருப்பு) காணிக்கையாக செலுத்துவதாக வேண்டி கொள்கின்றனர். தங்களது நோய் தீர்ந்ததும் தாங்கள் அணிந்திருக்கும் செருப்பு போல புது காலணிகளை வாங்கி வந்து காணிக்கை செலுத்துகின்றனர்.

இந்த காலணியை மறுநாள் வந்து பார்த்தால் அதன் அடிபாகத்தில் சிறிதளவு தேய்ந்து இருக்குமாம். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து வணங்கினால் திருப்பதிக்கு சென்றால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் கிடைக்குமாம். இதனால் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்த நினைப்பவர்கள் இங்கு அதை செலுத்தலாம்.

No comments:

Post a Comment