Menu

Thirupathi Seva Online Live

Wednesday, January 23, 2013

திங்களூர் கோவில்


திங்களூர் கோவில்



ஸ்தல வரலாறு

சந்திரனுக்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள தலம் திங்களூர் தஞ்சாவூரிலிருந்து திருவையாறு சென்று அங்கிருந்து திங்களூர் செல்லலாம் அல்லது கும்ப கோணத்தில் இருந்து சுவாமி மலை, கபிஸ்தலம், கணபதி அக்ரகாரம் வழியாக செல்லலாம். தஞ்சாவூரில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. 

திங்கள் என்றால் சந்திரன் என்று பொருள். எனவே சந்திர பகவானுக்கு உகந்த தலம் திங்களூர். தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று திங்களூர்.சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறுகளை கொடுத்துள்ளார். அவர்களில் ஒருவரான அப்பூதியடிகள் பிறந்த ஊர் திங்களூர். 

அப்பூதியடிகள் சிறந்த சிவபக்தர். இவர் சிவபெருமானின் தொண்டர்களை வழிபட்டு அதன்மூலம் சிவபெருமானின்அருளை பெறலாம் என்ற எண்ணம் கொண்டவர். அப்படிப் பட்ட வணங் கத்தக்க வராக நாயன் மார்களில் ஒருவரான திருநாவுக் கரசரை தேர்ந்தெடுத்தார். ஆனால் அவரை  அப்பூதியடிகள் நேரில் சந்தித்தது கிடையாது. 

எனினும் திருநாவுக்கரசரின் பெருமைகளை கேள்வியுற்று இறைவனுக்கு பதிலாக திரு நாவுக்கரசரையே வணங்கி வந்தார். தன்னால் கட்டப்பட்ட மடம், தண்ணீர் பந்தல், அறச்சாலை ஆகிய அனைத்திற்கும் மற்றும் தன்மகனுக்கும் திருநாவுக்கரசர் பெயரையே சூட் டினார். ஒரு முறை திருநாவுக்கரசர் திருப்பழனம் என்ற தலத்திற்கு வந்த போது திங்களூருக்கு தரிசனம் செய்ய வந்தார். 

அங்குள்ள அறச்சாலை , தண்ணீர் பந்தல் ஆகியவைகளுக்கு தன்பெயர் வைக்கப்பட்டு இருப்பதை கண்டு வியந்தார். தன்பெயரை வைத்தவர் அப்பூதியடிகள் என்பதை அறிந்து அவரை கண்டு தங்களுடைய திருப்பெயரை வைக்காமல் திரு நாவுக்கரசர்பெயரை வைக்க காரணம் கேட்டார். 

அவர் யார் என்று அறியாத அப்பூதியடிகள் திருநாவுக்கரசரின் பெருமையை கூறினார். அப்பூதியடிகள் தாங்கள் யார்? என வினவ திருநாவுக்கரசரும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். அப்பூதியடிகளும் அவரை வணங்கி தன் இல்லத்திற்கு விருந்துண்ண வரவேண்டினார். வீட்டில் விருந்து தயாரானது. அப்பூதியடிகள் தன்மகன் திருநாவுக்கரசரை அழைத்து வாழை இலை கொண்டு வரச் சொன்னார். 

வாழை இலை நறுக்கி கொண்டிருக்கும் பொழுது அப்பூதியடிகள் மகன் திருநாவுக்கரசரை நல்ல பாம்பு ஒன்று தீண்டிவிட்டது. எனினும் சிவனடியார் உண்பது தடைபட கூடாது என்பதற்காக அச்சிறுவன் ஓடி வந்து தாயிடம் இலையை கொடுத்தான். அதற்குள் விஷம் தலைக்கேறி விட்டதால் அவன் வாயில் நுரை தள்ள கீழே விழுந்தான். அவன் உயிரும் பிரிந்துவிட்டது. 

இதனை கண்ட அப்பூதியடிகள் தன்மகன் இறந்ததனால் திருநாவுக் கரசருக்கு உணவு படைப்பது நின்று போய்விடுமோ என்று அஞ்சி மகனை ஒரு பாயில் சுருட்டி மூலையில் நிறுத்தி விட்டு விபரத்தை கூறாமல் திருநாவுக்கரசரை விருந்துண்ண அழைத்தார்.ஆனால் சிவனருள் பெற்ற திருநாவுக்கரசர் நடந்த நிகழ்ச்சிகளை கேட்க அப்பூதியடிகளும் விபரத்தை கூறினார். 

திருநாவுக்கரசர் அப்பூதியடி களின் மகன் சடலத்தை கொண்டு  வர செய்து திங்களூர் கோயில் முன் கிடத்தினார். விஷம் நீங்கிட சிவனை வேண்டி கீழ்கண்ட பத்து பாடல்களை பாடினார். திருநாவுக்கரசரின் பாடல்களால் மகிழ்ந்த சிவபெருமான் ஏறிய விஷத்தை நீக்கி அருள் புரிந்தார். அப்பூதியடிகள் மகன் உயிர் பெற்று எழுந்தான். அத்தகைய சிறப்பு பெற்றதலம் திங்களூர். 

சந்திரபகவான் திங்களூரில் எழுந்தருளி இருக்கும் சிவனை வழிபட்டு நற்பேறு பெற்றார். சாலையில் இருந்து வயல்கள் சூழ்ந்துள்ள பாதையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அருள்மிகு கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில்  தற்பொழுது தெற்குப்புற வாயில்தான் புழக்கத்தில் உள்ளது. 

முதலில் விநாயகரை வணங்க வேண்டும். இடது புறம் கைலாசநாதர் சன்னதி உள்ளது. அவைர வணங்கி அவருக்கு எதிரே உள்ள அன்னை பெரிய நாயகியை வணங்க வேண்டும். பிரகாரம் வலம் தொடங்கி தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். 

கீழ்புறும் மேற்கு நோக்கியவாறு சந்திரன் காட்சியளிக்கிறார் இறைவனை நோக்கி வணங்கியவாறு சந்திரபகவான் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். தொடர்புக்கு :- 04362-262499.

No comments:

Post a Comment