Menu

Thirupathi Seva Online Live

Wednesday, January 23, 2013

நவகிரக தலங்கள்


 navagraha temples,நவகிரக தலங்கள்


சூரியன் : சூரியனார் கோவில், சூரிய நாராயணார் மூர்த்தியின் பெயர் சிவ சூரிய நாராயண ஸ்வாமி. இங்கு சிவ ஸ்வரூபியான சூரியன் தன் இஷ்ட தெய்வமாகிய பிரணவ ஸ்ரூபியாயும், பிரும்ம விஷ்ணு ருத்ர ரூபியாயும் இருக்கிற லிங்கத்தை ஸ்தாபித்துக் கொண்டு தமது திருக்கோலத்தையும் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.

சந்திரன் : திருமலை, திருப்பதி, வேங்கடாஜலபதி சேஷாசலம் என்கிற திருவேங்கட ஷேத்திரத்தில் சுதர்சன சுக்ராதிபதியான வேங்கடேசப் பெருமானின் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் சந்திரன்.

செவ்வாய் : பழனி தண்டாயுத பாணி. வடக்கில் பிரகதீஸ்வரரும், தெற்கில் காளியும் சுற்றிலும் ஆறு ஷேத்திரங்களையுடைய தண்டாயுதபாணியை ஸ்தாபித்து அவர் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் அங்காரகன்.

புதன் : மதுரை சுந்தரேஸ்வரர் சொக்கநாதரையும் மகாமாரியையும் ஸ்தாபித்து சுந்தரேஸ்வரர் பாதத்தில் புதன் தன்னை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.

குரு : திருச்செந்தூர் முருகன் திருச்செந்தூரில் ஸ்ரீ பாலசுப்பிரமணியமாய் தம்மைத்தாமே ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.

சுக்கிரன் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் நான்கு ராஜாக்களில் ஒருவரான ஸ்ரீரங்கநாதரை (தியாகராஜா, ரங்கராஜா, நடராஜா, கோவிந்தராஜா) காவேரி அரங்கத்தில் எழுந்தருள செய்து அவர் காலடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார். சில நாடிக் கிரந்தங்களில் சுக்கிரனை `நீர்' என்று குறிப்பிட்டிருக்கிறது. சுற்றிலும் நீர் நிலையாக உள்ள ஸ்ரீரங்கத்தை தன் பிரதிஷ்டா ஸ்தலமாக சுக்கிரன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது.

சனி-திருநள்ளாறு : தர்ப்பாரணியேஸ்வரர் திருநள்ளாற்றில் தர்ப்பாரண்யேஸ்வரரை ஸ்தாபித்து தன் ஸ்வரூப பிம்பத்தினடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் சனி பகவான்.

ராகு-கேது : காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர். இவ்விரு கிரகங்களும் தன் இஷ்ட தெய்வமாகிய வாயு லிங்கத்தை ஸ்தாபித்து அதன் காலடியில் தங்கள் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment