Monday, January 28, 2013
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில்
ஸ்தல வரலாறு
காவிரிக் கரையில் அமைந்துள்ளவற்றில் ஆறு சிவ தலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்ததாக உள்ள இந்த கோவில் நீண்ட 3 பிரகாரங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் வரகுண பாண்டியன். இவன் ஒருமுறை அருகில் உள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். வேட்டையாடி முடித்து அரண்மனை திரும்புவதற்கு இரவு நேரமாகி விட்டது. அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் கடுமையான இருள் காரணமாக, வழியில் படுத்திருந்த அந்தணன் ஒருவன், பாண்டிய மன்னன் அமர்ந்து சென்ற குதிரை மிதித்து இறந்து விட்டான்.
தன்னையும் அறியாமல் இந்த பிழை செய்திருந்தாலும், அந்தணனை கொன்ற பாவத்தால் வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. மேலும் அந்தணனின் ஆவியும், அரசனை பற்றிக்கொண்டு ஆட்டுவித்தது.
சிறந்த சிவ பக்தனாக விளங்கிய பிரம்மஹத்தி
வரகுண பாண்டியன், பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்தும் அந்தணனின் ஆவியின் பிடியில் இருந்தும் விடுபட மதுரை சோமசுந்தரரை நாடினான்.
கிழக்கு வாசல் வழியாக
அப்போது சோமசுந்தரர், வரகுண பாண்டியனின் கனவில் தோன்றி, திருவிடைமருதூர் சென்று அங்கு மகாலிங்கேஸ்வரராக உள்ள தன்னை தரிசனம் செய்து வரும்படி உபாயம் கூறினார். ஆனால் எதிரி நாடான சோழ நாட்டில் அமைந்துள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்ற குழப்பம் வரகுண பாண்டியனை தொற்றிக்கொண்டது.
இந்த நேரத்தில் சோழ மன்னன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வரும் தகவல் வரகுணபாண்டியனுக்கு கிடைத்தது. வரகுண பாண்டியன், சோழ மன்னனுடன் போர் புரிந்து அவரை போரில் வெற்றி கொண்டு, சோழ நாடுவரை அந்த மன்னனை துரத்திச் சென்றான். சோழ நாட்டுக்குள் புகுந்ததும் திருவிடைமருதூர் சென்று அங்குள்ள மகாலிங்கேஸ்வரரை கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து தரிசனம் செய்தான்.
தோஷம் நீங்கியது
கோவிலுக்குள் நுழைந்த வரகுண பாண்டியனை, பின்தொடர முடியாமல் பிரம்மஹத்தி தோஷமும், அந்தணனின் ஆவியும், கோவில் உள்ளே நுழைய தைரியமின்றி வாசலிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் பிடித்துக் கொள்ளலாம் என்று கிழக்கு வாசலின் வெளியே காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ, வரகுண பாண்டியனை மேற்கு வாசல் வழியாக வெளியேறி செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டார்.
அதன்படி அரசனும் மேற்கு வாசல் வழியாக வெளியேறி பிரம்மஹத்தி தோஷம் நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான். இதனை நினைவு கூறும் வகையில் இன்றள வும், திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பிரதான கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து, மேற்கிலுள்ள அம்மன் சன்னதி வழியாக வெளியே செல்லும் முறையை கடைபிடித்து வருகின்றனர். இதன் மூலமாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து விதமான தோஷங்கள் நீங்கப்பெறும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருக்கிறது.
மகாலிங்கேஸ்வரர்
இந்த கோவிலில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாக, மகாலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள இறைவன் தன்னைத்தானே அர்ச்சித்து கொண்டு பூஜை விதிகளை சப்தரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் இது. மார்க்கண்டேயர் விருப்பத்தின்படி, இத்தல இறைவன் அர்த்த நாரீஸ்வரராக காட்சி கொடுத்துள்ளார்.
அம்மன் பிருஹத் சுந்தர குசாம்பிகை, நன்முலைநாயகி என்ற பெயரில் அருள்புரிந்து வருகிறார். திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் அருகே திருவலஞ்சுழி விநாயகர் கோவில், சுவாமி மலை முருகர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவில், திருசேய்ஞலூர் சண்டேச்சுரர் கோவில், சீர்காழி பைரவர் கோவில், சூரியனார் நவரக்கிரக கோவில் போன்ற பரிவார மூர்த்த தலங்கள் அமையப் பெற்றுள்ளதால் திருவிடை மருதூர் கோவில் மகாலிங்க தலம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த தலத்தில் உள்ள மகாலிங்க பெருமானை பூஜித்து, பல உயிர்களும் மேன்மை பெறும் வகையில் அரசாட்சி செய்து வந்ததால் இங்குள்ள விநாயகருக்கு ஆண்ட விநாயகர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அகத்தியர் உள்ளிட்ட முனிவர்களின் தவத்திற்கு இரங்கி அம்பிகை எழுந்தருளி வந்து காட்சி கொடுத்தார்.
பின்னர் அம்பிகை, சிவபெருமானை நோக்கிதவம் புரிய அதன் பொருட்டு ஈசன் ஜோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் அம்பிகை மற்றும் முனிவர்களுக்கு காட்சி கொடுத்தார். திருவிடைமருதூர் தலத்தில் மகாலிங்கேஸ்வரருக்கு பூஜை நடைபெற்ற பிறகே, விநாயகருக்கு பூஜை நடை பெறும். மகாலிங்க பெருமானை, உமாதேவி, விநாயகர், சுப்பிரமணியர், உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரம்மாதி தேவர்கள், லட்சுமி, சரஸ்வதி, முனிவர்கள் ஆகியோர் பூஜித்து வழிபட்டுள்ளனர்.
இத்தலம் சந்திரனுக்கு வழிபட்ட தெய்வங்கள்
இந்த தலத்தில் உள்ள மகாலிங்க பெருமானை பூஜித்து, பல உயிர்களும் மேன்மை பெறும் வகையில் அரசாட்சி செய்து வந்ததால் இங்குள்ள விநாயகருக்கு ஆண்ட விநாயகர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அகத்தியர் உள்ளிட்ட முனிவர்களின் தவத்திற்கு இரங்கி அம்பிகை எழுந்தருளி வந்து காட்சி கொடுத்தார்.
பின்னர் அம்பிகை, சிவபெருமானை நோக்கி தவம் புரிய அதன் பொருட்டு ஈசன் ஜோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் அம்பிகை மற்றும் முனிவர்களுக்கு காட்சி கொடுத்தார். திருவிடைமருதூர் தலத்தில் மகாலிங்கேஸ்வரருக்கு பூஜை நடைபெற்ற பிறகே, விநாயகருக்கு பூஜை நடை பெறும். மகாலிங்க பெருமானை, உமாதேவி, விநாயகர், சுப்பிரமணியர், உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரம்மாதி தேவர்கள், லட்சுமி, சரஸ்வதி, முனிவர்கள் ஆகியோர் பூஜித்து வழிபட்டுள்ளனர்.
இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டதால், நட்சத்திர தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. இங்கு 27 நட்சத்திரங்களும், 27 லிங்கங்களாக ஆடவல்லான் மண்டபத்தில் எழுந்தருளியுள்ளன.
பஞ்சலிங்க தலம்
இங்குள்ள இறைவனை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப்புலவர் ஆகியோர் தங்கள் பாடலால் பரவசப்படுத்தியுள்ளனர். கோவிலில் காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவததீர்த்தம் உள்ளிட்ட முப்பத்திரண்டு தீர்த்தங்கள் அமையப்பெற்றுள்ளன.
தலமரமாக மருத மரம் விளங்குகிறது. மூலவர் மகாலிங்கேஸ்வரர் சன்னதியின் நான்கு மூலைகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன. இதனால் இந்த கோவில் பஞ்சலிங்க தலமாகவும் போற்றப்படுகிறது.
இந்த கோவிலில் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். கும்பகோணத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில். கும்பகோணத்தில் இருந்து டவுன் பஸ்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன. பலன் கொடுக்கும்
பிரகாரங்கள்
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் நீண்ட பிரகாரங்களை கொண்டதாகும். இந்த கோவிலில் அஸ்வமேதப் பிரகாரம், கொடுமுடிப் பிரகாரம், பிரணவ பிரகாரம் ஆகிய 3 பிரகாரங்கள் அமைந்துள்ளன. இந்த மூன்று பிரகாரங்களும் மிகுந்த புனிதத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. அஸ்வமேதப்பிரகாரமானது வெளிப்பிரகாரம் ஆகும்.
இந்த பிரகாரத்தை வலம் வருவதன் மூலமாக அஸ்வமேத யாகம் செய்த பலனை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல் மத்தியில் அமைந்துள்ள கொடுமுடிப்பிரகாரத்தை வலம் வருவதன் மூலமாக சிவபெருமான் குடியிருக்கும் கயிலாய பர்வதத்தை வலம் வந்த பலன் கிடைக்கும். உள் பிரகாரமான மூன்றாவது பிரகாரம் பிரணவ பிரகாரமாகும். இந்த பிரகாரத்தை வலம் வருவதனால், மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment