Menu

Thirupathi Seva Online Live

Monday, January 28, 2013

நம்பிராயர் கோவில்


                    திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள திருக்குறுங்குடியில் அமைந்துள்ள அழகிய நம்பிராயர் கோவில், தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்றதாகவும், பல சிறப்புகளை உள்ளடக்கியதாகவும் விளங்கும் நம்பிராயர் கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முந்தையது ஆகும். மேலும் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.
 நம்பிராயர் கோவில்

திருமங்கையாழ்வார் கட்டியது
                மகேந்திரகிரி என்ற மலை அடிவாரத்தில் இந்த கோவில்  அமைந்துள்ளது. ராமாயண காலத்தில் ராமரும், லட்சுமணரும், வானர படைகளுடன், ராவணனுடன் போர் புரிவதற்காக தங்கிய இடம் இந்த மகேந்திரகிரி மலை என்று   கூறப்படுகிறது. இந்த மலையில் இறைவனின் பாதச்சுவடு   உள்ளது. ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வார் இந்த கோவிலை கட்டியதாக தல வரலாறு கூறுகிறது.

மேலும் வைணவ தலத்தின் குரு என்று அழைக்கப்படும் ராமானுஜரின் மந்திர உபதேசம் இந்த தலத்தில் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. திருமங்கையாழ்வார் இந்த கோவில் அமைந்த இடத்தில்தான் முக்தி நிலையை அடைந்துள்ளார். அவரது ஜீவசமாதி இங்கு அமைந்துள்ளது. நம்பாடுவான் என்ற பக்தனுக்கும், பிரம்மராஜனுக்கும் மோட்சம் கிடைத்த தலமாகவும் இது உள்ளது.

நம்பிராயர் கோவில்
                   இந்த கோவிலில் அமைந்துள்ள இறைவன் நம்பிராயர் என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். கோவிலுக்குள் இரண்டு நம்பிகள், அதாவது இருந்த நிலையில் ஒரு நம்பியும், பள்ளி கொண்ட நிலையில் ஒரு நம்பியுமாக இறைவன் அருளாசி புரிகிறார். அருகில் தாயார் சன்னதி அமைந்துள்ளது. மேலும் இந்த ஆலயத்தில் சிவன் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

எம்பெருமான் வாமன அவதாரம் எடுத்த ஸ்தலம் இது என்று போற்றப்படுகிறது. ஆழ்வார்களான திருமங்கையாழ்வார், திருமொழிசையாழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இந்த கோவிலில் உள்ள நம்பிராயர் இறைவனை புகழ்பெற்ற பாடல்களால் பாடியுள்ளனர். நம்பிராயர் கோவிலுக்கு முன்பாக காவல் தெய்வமாக கால பைரவர் சன்னதியும் உள்ளது.  

பைரவர் முகத்திற்கு மேல் இரண்டு விளக்குகள் உள்ளன. இதில் ஒரு விளக்கு அசைந்து கொண்டே இருக்கும். இது அவர் மூச்சு விடுவதால் என்று கூறப்படுகிறது. பைரவருக்கு பூச்சட்டையும், வடை மாலையும் சாத்தி பிரார்த்தனை செய்யப்படுகிறது. தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு சிறப்பு பிரார்த்தனை செய்யப்படும். ஈசானிய மூலையில் ஊர் எல்லைக் காளியாக குறுங்குடி அம்மன் கோவில் உள்ளது.

ஊரின் நடுவில் திருப்பாற்கடல் நம்பி கோவில் அமைந்துள்ளது. மேலும் நம்பிராயர் கோவிலில் தினந் தோறும் நடக்கும் பூஜைகள் சிறப்பு மிக்கது. மேலும் திருவிழாக்களும் விமரிசையாக கொண்டாடப்படும். தைப்பூசத் தினத்தில் தெப்ப உற்சவம் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

தை மாத திருவோண நட்சத்திரத்தில் பத்திர தீப திருவிழாவும், பங்குனி மாதத்தில் கொடியேற்றப்பட்டு 10 நாள் விழாவும் நடைபெறும். இந்த விழாவின் போது தினமும் சாமி வீதி உலா வருவார். தேர்த் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுப்பார்கள்.

திருவிழாக்கள்
               திருக்குறுங்குடியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு தொடர்ச்சி   மலை மீது மலைநம்பி கோவில் இருக்கிறது. உயரமான, இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. நம்பி மலை ஏறினால், நம்பி வரம் அளிப்பார் என்பது இந்த மலைக்கோவிலுக்கு வரும் ஒவ்வொரு பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

மலைப்பாதை கரடுமுரடாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் இங்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று சொல்வார்கள். அதைப் போல இங்குள்ள மலையின் மீது வாசம் செய்கிறார் ஸ்ரீனிவாசப் பெருமாள். மலை மீது அமர்ந்திருக்கும் இறைவன் அழகிய நம்பி என்ற திருநாமத்துடன் அழைக்கப்படுகிறார். நம்பி என்பது இறைவன்   பெயர் என்பதால் அவர் அமர்ந்திருக்கும் மலையும், நம்பி மலை என்றே அழைக்கப்படுகிறது.

பக்தர்கள் வருகை அதிகம் கோடை காலங்களில் அனைவரும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை பகுதிகளுக்கு செல்லவே விருப்பம் தெரிவிப்பார்கள். அந்த வகையில் ஆன்மிக ரீதியாகவும், இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதி என்ற வகையிலும் நம்பி மலையில் உள்ள அழகிய நம்பியை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை எண்ணில் அடங்காதது. தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்து இந்த கோவிலுக்கு யாத்திரையாக வரும் பக்தர்கள் அதிகம். புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று நடைபெறும் விழாவில் பாதயாத்திரையாக நடந்து வந்து கலந்து கொள்வார்கள்.

அமைவிடம்
                  திருநெல்வேலி மாவட்டம், நாங்கு நேரி தாலுகா, களக்காடு ஒன்றியத்தில் அமைந்துள்ளது திருக்குறுங்குடி. குறுகிய மன்னனின் குடி என்பதால் குறுங்குடி என்று பெயர் வந்தது. இந்த ஊர் தெய்வ ஸ்தலங்கள் அமைந்த இடமாக இருப்பதால், குறுங்குடிக்கு முன்னால் திரு சேர்த்து திருக்குறுங்குடி என்றானதாக வரலாறு தெரிவிக்கிறது.

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில்


ஸ்தல வரலாறு
திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில்

காவிரிக் கரையில் அமைந்துள்ளவற்றில் ஆறு சிவ தலங்கள் காசிக்கு நிகராக கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்று திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் திருக்கோவில் ஆகும். சுமார் 1200 ஆண்டுகளுக்கு முந்தைய பழமைவாய்ந்ததாக உள்ள இந்த கோவில் நீண்ட 3 பிரகாரங்களை கொண்டதாக அமைந்துள்ளது.

பாண்டிய நாட்டை ஆட்சி செய்தவன் வரகுண பாண்டியன். இவன் ஒருமுறை அருகில் உள்ள காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். வேட்டையாடி முடித்து அரண்மனை திரும்புவதற்கு இரவு நேரமாகி விட்டது. அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில் கடுமையான இருள் காரணமாக, வழியில் படுத்திருந்த அந்தணன் ஒருவன், பாண்டிய மன்னன் அமர்ந்து சென்ற குதிரை மிதித்து இறந்து விட்டான்.

தன்னையும் அறியாமல் இந்த பிழை செய்திருந்தாலும், அந்தணனை கொன்ற பாவத்தால் வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி   தோஷம் ஏற்பட்டது. மேலும் அந்தணனின் ஆவியும், அரசனை பற்றிக்கொண்டு ஆட்டுவித்தது.

சிறந்த சிவ பக்தனாக விளங்கிய பிரம்மஹத்தி

வரகுண பாண்டியன், பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்தும் அந்தணனின் ஆவியின் பிடியில் இருந்தும் விடுபட மதுரை சோமசுந்தரரை நாடினான்.

கிழக்கு வாசல் வழியாக

அப்போது சோமசுந்தரர், வரகுண பாண்டியனின் கனவில் தோன்றி, திருவிடைமருதூர் சென்று அங்கு மகாலிங்கேஸ்வரராக உள்ள தன்னை தரிசனம் செய்து வரும்படி உபாயம் கூறினார். ஆனால் எதிரி நாடான சோழ நாட்டில் அமைந்துள்ள திருவிடைமருதூருக்கு எப்படிச் செல்வது என்ற குழப்பம் வரகுண பாண்டியனை தொற்றிக்கொண்டது.

இந்த நேரத்தில் சோழ மன்னன், பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வரும் தகவல் வரகுணபாண்டியனுக்கு கிடைத்தது. வரகுண பாண்டியன், சோழ மன்னனுடன் போர் புரிந்து அவரை போரில் வெற்றி கொண்டு, சோழ நாடுவரை அந்த மன்னனை துரத்திச் சென்றான். சோழ நாட்டுக்குள் புகுந்ததும் திருவிடைமருதூர் சென்று அங்குள்ள மகாலிங்கேஸ்வரரை கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து தரிசனம் செய்தான்.

தோஷம் நீங்கியது

கோவிலுக்குள் நுழைந்த வரகுண பாண்டியனை, பின்தொடர முடியாமல் பிரம்மஹத்தி தோஷமும், அந்தணனின் ஆவியும், கோவில் உள்ளே நுழைய தைரியமின்றி வாசலிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் பிடித்துக் கொள்ளலாம் என்று கிழக்கு வாசலின் வெளியே காத்திருந்தன. ஆனால் திருவிடைமருதூர் இறைவனோ, வரகுண பாண்டியனை மேற்கு வாசல் வழியாக வெளியேறி செல்லும்படி அசரீரியாக ஆணையிட்டார்.

அதன்படி அரசனும் மேற்கு வாசல் வழியாக வெளியேறி பிரம்மஹத்தி தோஷம் நீங்கியவனாக பாண்டியநாடு திரும்பினான். இதனை நினைவு கூறும் வகையில் இன்றள வும், திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பிரதான கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழைந்து, மேற்கிலுள்ள அம்மன் சன்னதி வழியாக வெளியே செல்லும் முறையை கடைபிடித்து வருகின்றனர். இதன் மூலமாக தங்களுக்கு ஏற்பட்டுள்ள அனைத்து விதமான தோஷங்கள் நீங்கப்பெறும் என்பது அனைவரின் நம்பிக்கையாக இருக்கிறது.

மகாலிங்கேஸ்வரர்

இந்த கோவிலில் உள்ள இறைவன் சுயம்புலிங்க மூர்த்தியாக, மகாலிங்கேஸ்வரர் என்ற திருநாமத்துடன் அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள இறைவன் தன்னைத்தானே அர்ச்சித்து கொண்டு பூஜை விதிகளை சப்தரிஷிகள் மற்றும் முனிவர்களுக்கு போதித்து அருளிய தலம் இது. மார்க்கண்டேயர் விருப்பத்தின்படி, இத்தல இறைவன் அர்த்த நாரீஸ்வரராக காட்சி கொடுத்துள்ளார்.

அம்மன் பிருஹத் சுந்தர குசாம்பிகை, நன்முலைநாயகி என்ற பெயரில் அருள்புரிந்து வருகிறார். திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் அருகே திருவலஞ்சுழி விநாயகர் கோவில், சுவாமி மலை முருகர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், ஆலங்குடி தட்சிணாமூர்த்தி கோவில், திருசேய்ஞலூர் சண்டேச்சுரர் கோவில், சீர்காழி பைரவர் கோவில், சூரியனார் நவரக்கிரக கோவில் போன்ற பரிவார மூர்த்த தலங்கள் அமையப் பெற்றுள்ளதால் திருவிடை மருதூர் கோவில் மகாலிங்க தலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த தலத்தில் உள்ள மகாலிங்க பெருமானை பூஜித்து, பல உயிர்களும் மேன்மை பெறும் வகையில் அரசாட்சி செய்து வந்ததால் இங்குள்ள விநாயகருக்கு ஆண்ட விநாயகர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அகத்தியர் உள்ளிட்ட முனிவர்களின் தவத்திற்கு இரங்கி அம்பிகை எழுந்தருளி வந்து காட்சி கொடுத்தார்.

பின்னர் அம்பிகை, சிவபெருமானை நோக்கிதவம் புரிய அதன் பொருட்டு ஈசன் ஜோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் அம்பிகை மற்றும் முனிவர்களுக்கு காட்சி கொடுத்தார். திருவிடைமருதூர் தலத்தில் மகாலிங்கேஸ்வரருக்கு பூஜை நடைபெற்ற பிறகே, விநாயகருக்கு பூஜை நடை பெறும். மகாலிங்க பெருமானை, உமாதேவி, விநாயகர், சுப்பிரமணியர், உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரம்மாதி தேவர்கள், லட்சுமி, சரஸ்வதி, முனிவர்கள் ஆகியோர் பூஜித்து வழிபட்டுள்ளனர்.

இத்தலம் சந்திரனுக்கு வழிபட்ட தெய்வங்கள்

இந்த தலத்தில் உள்ள மகாலிங்க பெருமானை பூஜித்து, பல உயிர்களும் மேன்மை பெறும் வகையில் அரசாட்சி செய்து வந்ததால் இங்குள்ள விநாயகருக்கு ஆண்ட விநாயகர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. அகத்தியர் உள்ளிட்ட முனிவர்களின் தவத்திற்கு இரங்கி அம்பிகை எழுந்தருளி வந்து காட்சி கொடுத்தார்.

பின்னர் அம்பிகை, சிவபெருமானை நோக்கி தவம் புரிய அதன் பொருட்டு ஈசன் ஜோதி வடிவமாகவும், ஏகநாயக வடிவமாகவும் அம்பிகை மற்றும் முனிவர்களுக்கு காட்சி கொடுத்தார். திருவிடைமருதூர் தலத்தில் மகாலிங்கேஸ்வரருக்கு பூஜை நடைபெற்ற பிறகே, விநாயகருக்கு பூஜை நடை பெறும். மகாலிங்க பெருமானை, உமாதேவி, விநாயகர், சுப்பிரமணியர், உருத்திரர், விஷ்ணு, சந்திரன், பிரம்மாதி தேவர்கள், லட்சுமி, சரஸ்வதி, முனிவர்கள் ஆகியோர் பூஜித்து வழிபட்டுள்ளனர்.

இத்தலம் சந்திரனுக்குரிய தலமாகவும், பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் தலமாகவும், 27 நட்சத்திரங்கள் வழிபட்டதால், நட்சத்திர தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. இங்கு 27 நட்சத்திரங்களும், 27 லிங்கங்களாக ஆடவல்லான் மண்டபத்தில் எழுந்தருளியுள்ளன.

பஞ்சலிங்க தலம்

இங்குள்ள இறைவனை திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், கருவூர்தேவர், பட்டினத்தார், அருணகிரிநாதர், காளமேகப்புலவர் ஆகியோர் தங்கள் பாடலால் பரவசப்படுத்தியுள்ளனர். கோவிலில் காருண்யாமிர்த தீர்த்தம், சோம தீர்த்தம், கனக தீர்த்தம், கல்யாண தீர்த்தம், ஐராவததீர்த்தம் உள்ளிட்ட முப்பத்திரண்டு தீர்த்தங்கள் அமையப்பெற்றுள்ளன.

தலமரமாக மருத மரம் விளங்குகிறது. மூலவர் மகாலிங்கேஸ்வரர் சன்னதியின் நான்கு மூலைகளிலும் விஸ்வநாதர், ஆத்மநாதர், ரிஷிபுரீஸ்வரர் மற்றும் சொக்கநாதர் ஆகியோரின் சன்னதிகள்   அமைந்துள்ளன. இதனால் இந்த கோவில் பஞ்சலிங்க தலமாகவும் போற்றப்படுகிறது.

இந்த கோவிலில் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். கும்பகோணத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில். கும்பகோணத்தில் இருந்து டவுன் பஸ்கள் அதிகமாக இயக்கப்படுகின்றன. பலன் கொடுக்கும்

பிரகாரங்கள்

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவில் நீண்ட பிரகாரங்களை கொண்டதாகும். இந்த கோவிலில் அஸ்வமேதப் பிரகாரம், கொடுமுடிப் பிரகாரம், பிரணவ பிரகாரம் ஆகிய 3 பிரகாரங்கள் அமைந்துள்ளன. இந்த மூன்று பிரகாரங்களும் மிகுந்த புனிதத்தன்மை கொண்டதாக கருதப்படுகிறது. அஸ்வமேதப்பிரகாரமானது வெளிப்பிரகாரம் ஆகும்.

இந்த பிரகாரத்தை வலம் வருவதன் மூலமாக அஸ்வமேத யாகம் செய்த பலனை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல் மத்தியில் அமைந்துள்ள கொடுமுடிப்பிரகாரத்தை வலம் வருவதன் மூலமாக சிவபெருமான் குடியிருக்கும் கயிலாய பர்வதத்தை வலம் வந்த பலன் கிடைக்கும். உள் பிரகாரமான மூன்றாவது பிரகாரம் பிரணவ பிரகாரமாகும். இந்த பிரகாரத்தை வலம் வருவதனால், மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Wednesday, January 23, 2013

நவகிரக தலங்கள்


 navagraha temples,நவகிரக தலங்கள்


சூரியன் : சூரியனார் கோவில், சூரிய நாராயணார் மூர்த்தியின் பெயர் சிவ சூரிய நாராயண ஸ்வாமி. இங்கு சிவ ஸ்வரூபியான சூரியன் தன் இஷ்ட தெய்வமாகிய பிரணவ ஸ்ரூபியாயும், பிரும்ம விஷ்ணு ருத்ர ரூபியாயும் இருக்கிற லிங்கத்தை ஸ்தாபித்துக் கொண்டு தமது திருக்கோலத்தையும் ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.

சந்திரன் : திருமலை, திருப்பதி, வேங்கடாஜலபதி சேஷாசலம் என்கிற திருவேங்கட ஷேத்திரத்தில் சுதர்சன சுக்ராதிபதியான வேங்கடேசப் பெருமானின் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் சந்திரன்.

செவ்வாய் : பழனி தண்டாயுத பாணி. வடக்கில் பிரகதீஸ்வரரும், தெற்கில் காளியும் சுற்றிலும் ஆறு ஷேத்திரங்களையுடைய தண்டாயுதபாணியை ஸ்தாபித்து அவர் காலடியில் தன் காயத்ரீயை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் அங்காரகன்.

புதன் : மதுரை சுந்தரேஸ்வரர் சொக்கநாதரையும் மகாமாரியையும் ஸ்தாபித்து சுந்தரேஸ்வரர் பாதத்தில் புதன் தன்னை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.

குரு : திருச்செந்தூர் முருகன் திருச்செந்தூரில் ஸ்ரீ பாலசுப்பிரமணியமாய் தம்மைத்தாமே ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்.

சுக்கிரன் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் நான்கு ராஜாக்களில் ஒருவரான ஸ்ரீரங்கநாதரை (தியாகராஜா, ரங்கராஜா, நடராஜா, கோவிந்தராஜா) காவேரி அரங்கத்தில் எழுந்தருள செய்து அவர் காலடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார். சில நாடிக் கிரந்தங்களில் சுக்கிரனை `நீர்' என்று குறிப்பிட்டிருக்கிறது. சுற்றிலும் நீர் நிலையாக உள்ள ஸ்ரீரங்கத்தை தன் பிரதிஷ்டா ஸ்தலமாக சுக்கிரன் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது.

சனி-திருநள்ளாறு : தர்ப்பாரணியேஸ்வரர் திருநள்ளாற்றில் தர்ப்பாரண்யேஸ்வரரை ஸ்தாபித்து தன் ஸ்வரூப பிம்பத்தினடியில் தன் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார் சனி பகவான்.

ராகு-கேது : காளஹஸ்தி காளஹஸ்தீஸ்வரர். இவ்விரு கிரகங்களும் தன் இஷ்ட தெய்வமாகிய வாயு லிங்கத்தை ஸ்தாபித்து அதன் காலடியில் தங்கள் யந்திரத்தை ஸ்தாபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திங்களூர் கோவில்


திங்களூர் கோவில்



ஸ்தல வரலாறு

சந்திரனுக்கு தஞ்சை மாவட்டத்தில் உள்ள தலம் திங்களூர் தஞ்சாவூரிலிருந்து திருவையாறு சென்று அங்கிருந்து திங்களூர் செல்லலாம் அல்லது கும்ப கோணத்தில் இருந்து சுவாமி மலை, கபிஸ்தலம், கணபதி அக்ரகாரம் வழியாக செல்லலாம். தஞ்சாவூரில் இருந்து 14 கி.மீ. தூரத்தில் உள்ளது. 

திங்கள் என்றால் சந்திரன் என்று பொருள். எனவே சந்திர பகவானுக்கு உகந்த தலம் திங்களூர். தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று திங்களூர்.சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாறுகளை கொடுத்துள்ளார். அவர்களில் ஒருவரான அப்பூதியடிகள் பிறந்த ஊர் திங்களூர். 

அப்பூதியடிகள் சிறந்த சிவபக்தர். இவர் சிவபெருமானின் தொண்டர்களை வழிபட்டு அதன்மூலம் சிவபெருமானின்அருளை பெறலாம் என்ற எண்ணம் கொண்டவர். அப்படிப் பட்ட வணங் கத்தக்க வராக நாயன் மார்களில் ஒருவரான திருநாவுக் கரசரை தேர்ந்தெடுத்தார். ஆனால் அவரை  அப்பூதியடிகள் நேரில் சந்தித்தது கிடையாது. 

எனினும் திருநாவுக்கரசரின் பெருமைகளை கேள்வியுற்று இறைவனுக்கு பதிலாக திரு நாவுக்கரசரையே வணங்கி வந்தார். தன்னால் கட்டப்பட்ட மடம், தண்ணீர் பந்தல், அறச்சாலை ஆகிய அனைத்திற்கும் மற்றும் தன்மகனுக்கும் திருநாவுக்கரசர் பெயரையே சூட் டினார். ஒரு முறை திருநாவுக்கரசர் திருப்பழனம் என்ற தலத்திற்கு வந்த போது திங்களூருக்கு தரிசனம் செய்ய வந்தார். 

அங்குள்ள அறச்சாலை , தண்ணீர் பந்தல் ஆகியவைகளுக்கு தன்பெயர் வைக்கப்பட்டு இருப்பதை கண்டு வியந்தார். தன்பெயரை வைத்தவர் அப்பூதியடிகள் என்பதை அறிந்து அவரை கண்டு தங்களுடைய திருப்பெயரை வைக்காமல் திரு நாவுக்கரசர்பெயரை வைக்க காரணம் கேட்டார். 

அவர் யார் என்று அறியாத அப்பூதியடிகள் திருநாவுக்கரசரின் பெருமையை கூறினார். அப்பூதியடிகள் தாங்கள் யார்? என வினவ திருநாவுக்கரசரும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். அப்பூதியடிகளும் அவரை வணங்கி தன் இல்லத்திற்கு விருந்துண்ண வரவேண்டினார். வீட்டில் விருந்து தயாரானது. அப்பூதியடிகள் தன்மகன் திருநாவுக்கரசரை அழைத்து வாழை இலை கொண்டு வரச் சொன்னார். 

வாழை இலை நறுக்கி கொண்டிருக்கும் பொழுது அப்பூதியடிகள் மகன் திருநாவுக்கரசரை நல்ல பாம்பு ஒன்று தீண்டிவிட்டது. எனினும் சிவனடியார் உண்பது தடைபட கூடாது என்பதற்காக அச்சிறுவன் ஓடி வந்து தாயிடம் இலையை கொடுத்தான். அதற்குள் விஷம் தலைக்கேறி விட்டதால் அவன் வாயில் நுரை தள்ள கீழே விழுந்தான். அவன் உயிரும் பிரிந்துவிட்டது. 

இதனை கண்ட அப்பூதியடிகள் தன்மகன் இறந்ததனால் திருநாவுக் கரசருக்கு உணவு படைப்பது நின்று போய்விடுமோ என்று அஞ்சி மகனை ஒரு பாயில் சுருட்டி மூலையில் நிறுத்தி விட்டு விபரத்தை கூறாமல் திருநாவுக்கரசரை விருந்துண்ண அழைத்தார்.ஆனால் சிவனருள் பெற்ற திருநாவுக்கரசர் நடந்த நிகழ்ச்சிகளை கேட்க அப்பூதியடிகளும் விபரத்தை கூறினார். 

திருநாவுக்கரசர் அப்பூதியடி களின் மகன் சடலத்தை கொண்டு  வர செய்து திங்களூர் கோயில் முன் கிடத்தினார். விஷம் நீங்கிட சிவனை வேண்டி கீழ்கண்ட பத்து பாடல்களை பாடினார். திருநாவுக்கரசரின் பாடல்களால் மகிழ்ந்த சிவபெருமான் ஏறிய விஷத்தை நீக்கி அருள் புரிந்தார். அப்பூதியடிகள் மகன் உயிர் பெற்று எழுந்தான். அத்தகைய சிறப்பு பெற்றதலம் திங்களூர். 

சந்திரபகவான் திங்களூரில் எழுந்தருளி இருக்கும் சிவனை வழிபட்டு நற்பேறு பெற்றார். சாலையில் இருந்து வயல்கள் சூழ்ந்துள்ள பாதையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அருள்மிகு கைலாசநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில்  தற்பொழுது தெற்குப்புற வாயில்தான் புழக்கத்தில் உள்ளது. 

முதலில் விநாயகரை வணங்க வேண்டும். இடது புறம் கைலாசநாதர் சன்னதி உள்ளது. அவைர வணங்கி அவருக்கு எதிரே உள்ள அன்னை பெரிய நாயகியை வணங்க வேண்டும். பிரகாரம் வலம் தொடங்கி தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். 

கீழ்புறும் மேற்கு நோக்கியவாறு சந்திரன் காட்சியளிக்கிறார் இறைவனை நோக்கி வணங்கியவாறு சந்திரபகவான் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார். தொடர்புக்கு :- 04362-262499.

நவக்கிரக கோயில்கள்


நவக்கிரங்கள்
கோயில்கள்
ஊர்
சூரியன்
1.சூரியனார் கோயில் 2.திருக்கண்டியூர் வீரட்டம் (திருவையாறுக்கு அருகில்) 3.திருப்புறவார் பனங்காட்டூர் (விழுப்புரம் அருகில்)

சூரியனார் கோவில்
சந்திரன்
1.திருப்பதி
2.திங்களூர் (திருவையாறுக்கு அருகில்)
திங்களூர்
செவ்வாய்
1.பழனி
2.திருச்சிறுகுடி (மயிலாடுதுறை அருகில்) 3.வைத்தீஸ்வரன் கோயில்
வைத்தீஸ்வரன் கோயில்
புதன்

1.மதுரை
2.திருவெண்காடு
திருவெண்காடு
குரு
1.திருச்செந்தூர்
2.`பாடி'என்ற திருவலி தாயம் (சென்னைக்கு அருகில்)
3.தென்குடி திட்டை (தஞ்சாவூர் அருகில்) 4.ஆலங்குடி
ஆலங்குடி
சுக்கிரன்
1.ஸ்ரீ ரங்கம்
 2.திருநாவலூர் (பண்ருட்டி அருகில்)
3.கஞ்சனூர்
கஞ்சனூர்
சனி


திருநள்ளாறு
திருநள்ளாறு
ராகு

1.ஸ்ரீகாளகஸ்தி 2.திருநாகேஸ்வரம்
திருநாகேஸ்வரம்
கேது

1.ஸ்ரீகாளகஸ்தி 2.கீழப்பெரும்பள்ளம்
கீழப்பெரும் பள்ளம்


சக்கரபாணி கோவில்

ஸ்தல வரலாறு 

    கோவில்கள் நிறைந்த கும்பகோணம் மாநகரில் காவிரியின் தென் கரையில் திருமழிசை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. சக்கரபாணி கோவில்.இந்திய துணைக் கண்டத்தில் ஸ்ரீசக்கரபாணி சுவாமிக்கு என்று அமைந்த ஒரே தனிக் கோவிலாக விளங்குகிறது. ஒவ்வொரு பெருமாள கோவிலிலும் சக்கரத்தாழ்வார் வீற்றிருப்பார். 

ஆனால் சக்கரபாணி கோவிலில் சக்கரத்தாழ்வாரே மூலவராக (சக்கரபாணியாக) வீற்றிருக்கிறார். மகாவிஷ்ணு தரித்துள்ள ஆயுதங்களுள் சங்கு, சக்கரம், சுதை, வில், வாள் ஆகிய ஐந்தும் மகிமை வாய்ந்தன.அவற்றை ஐம்படைகள் என்று சிறப்பாக அழைப்பது வழக்கம். திருமாலின் வலக்கரத்தில் காணப்படும் சக்கரத்தில் உறையும் தேவன் சுதர்சனர் எனப்படுகிறார்.

ஸ்ரீசக்கரம் திருமாலின் அம்சமாக இருப்பதால் இச்சுதர்சனரை சக்கர ரூப விஷ்ணு எனவும் குறிப்பிடுவர். பஞ்சாயுதங்களுக்கும் அரசனாக விளங்குவதால் அவருக்கு ஹேதிராஜன், சுதர்சன ராஜன் ஆகிய பெயர்கள் வழங்குகின்றன. திருமாலின் பஞ்சாயுதங்களுள் ஒன்றான சக்கரத்திற்கு உரிய சுதர்சனர் உக்கிர வடிவானவர். 

இவரே சக்கரத்தாழ்வார், சக்கர ராஜர், சக்கரபாணி சுவாமி என வழிபடப்படுகிறார். புருஷார்த்தங்கள் நான்கினையும் வழங்கும் வள்ளலாக திகழும் ஸ்ரீசுதர்சனர் முக்கிய மூர்த்தியாக நின்று அருள்பாலிக்கும் கோவிலே சக்கரபாணி சுவாமி கோவில் என வழங்கப்படுகிறது. இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. 

ஜலந்தராசுரன் என்னும் அசுரனை அழிக்கும் பொருட்டு விஷ்ணுவால் அனுப்பி வைக்கப்பட்ட சக்கரம் பாதாள உலகத்தில் ஜலந்தராசுரனை அழித்து  கும்பகோணத்தில் காவிரியின் நடுவில் பூமியை பிளந்து கொண்டு வெளிக் கிளம்பிய ஸ்ரீசக்கரம் பண்ணிய நல் விரதமெல்லாம் பலிக்க புண்ணிய தலமான கும்பகோணத்தில் காவிரியின் தென் கரையில் நீராடிக் கொண்டிருந்த பிரம்மனின் கரத்தில் வந்தமர்ந்தது. 

இதனால் பெரு மகிழ்ச்சி அடைந்த பிரம்மதேவனும், ஸ்ரீ சக்கரத்தை காவிரிக் கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தான். காவிரியின் தென் கரையில் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்க சூரியன் ஸ்ரீ சக்கரத்தின் ஒளியை கண்டு தன்னை விடவும் ஒன்று  தன்னைவிட பல மடங்கு அதிகமாக பிரகாசிப்பதை கண்டு கர்வமுற்று தன்னொளியை  கூட்ட  ஸ்ரீசக்கரம் கோடி சூரிய பிரகாசத்துடன் பேரொளி விடுத்து ஆதவனின் ஒளியை தன்னொளியில் அடக்கி சூரியனின் ஆணவத்தை அழிக்க சூரியன் ஒளியற்றவனாகவும் பலமற்றவனாகவும் ஆனான். 

ஒளியிழந்த சூரியன் தன்னொளி தனக்கு மீண்டும் கிடைக்க ஸ்ரீசக்கரத்தையே சரணடைந்து பிரார்த்திக்க வைகாசி மாத பவுர்ணமி திதியில் ஸ்ரீ சக்கரத்திலிருந்து சக்கரபாணி சுவாமி 3 கண்களுடனும், 8 கைகளுடனும் அக்னி மயமான கேசத்துடன் காட்சி தந்து ஆதவனின் ஒளியை மீண்டும் தந்து அருள் செய்தார். 

தன்னுடைய பெயரில் பாஸ்கரஷேத்திரம் என இத்தலம் அமையப் பெற வேண்டும் என வர பெற்ற சூரியன் சக்கரபாணி சுவாமிக்கு கோவில் நிர்மாணித்து பாஸ்கர ஷேத்திரம் என்னும் இத்திருத்தலத்தை வழிபாடு செய்தான். சூரியனும் வைகாசி மாதத்தில் கொடியேற்றி பாஞ்சராத்ர ஆகம நெறிப்படி உற்சவமும் செய்வித்தான். இன்று ஸ்ரீ சக்கரம் காவிரியில் தோன்றிய இடம் சக்கர தீர்த்தம் என்றும் சக்கர படித்துறை என்றும் வழங்கப்டுகின்றன.

சென்னையில் சூரிய கோவில்





ஸ்தல வரலாறு

சென்னை வண்டலூரில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொளப்பாக்கத்தில் சூரியனுக்கு என்ற சிறப்புத்தலம் உள்ளது. இது சென்னையில் உள்ள நவக்கிரக தலங்களில் முதன்மையான தலமாக கருதப்படுகிறது. போரூரில் இருந்து மியாத் மருத்துவமனை எதிரே செல்லும் சாலை வழியாக, கெருகம்பாக்கம் சென்றால் கொளப்பாக்கத்தை எளிதில் சென்று சேரலாம்.

அங்கு ஆனந்தவல்லி அம்மை உடனுறை அகத்தீஸ்வரர் ஆலயம் சிறப்பாக உள்ளது. இத்தலத்தில் மூலவராக அகத்தீஸ்வர சுவாமி உள்ளார். இறைவி பெயர் பெரியநாயகி அம்பிகை. இது 1300 ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான கோவிலாகும். இந்த கோவிலில் சிவபெருமானை பார்த்தப்படி மேற்கு நோக்கிய திசையில் சூரியன் உள்ளார்.

தனி சன்னதியில் உள்ள சூரியன், இங்கு சிவனை வணங்குவதாக ஐதீகம். இங்கு சூரிய பகவானுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அதை உணர்த்தும் வகையில் இத்தலத்தில் உள்ள அனைத்து கடவுள்களும் சூரியனை நோக்கியே உள்ளன. சூரியனுக்கு உகந்த நிறமான சிவப்பு வஸ்திரம் சார்த்தி இங்கு வழிபடுகிறார்கள்.

கோதுமை பொருட்கள் நைவேத்தியமாப படைக்கப்படுகிறது. இங்கு வழிபாடுகள் செய்ய ஞாயிற்றுக்கிழமை மிகவும் உகந்த நாளாகும். இத்தலத்தில் சூரியனை வழிபட்டால் நினைத்தது நடக்கும். உடலில் தேஜஸ் உண்டாகும். அகத்திய முனிவர் இத்தலத்தில் சிறப்பு வழிபாடுகள் செய்ததால், இறைவன் அகத்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறார்.

ராஜகணபதி, காசி விசுவநாதர், சுப்பிரமணியர், தனி சன்னதிகளில் உள்ளனர். சுப்பிரமணியர் தலத்தில் உள்ள மயில் மரகதக் கல்லால் (பச்சை) உருவாக்கப்பட்டதாகும். இங்குள்ள கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். ஞாயிறு தோறும் ராகுகாலத்தில் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.

6 வாரம் தொடர்ந்து பைரவரை வணங்கினால் நினைத்தது நடக்கும். ராஜராஜ சோழன், குலோத்துங்க சோழன், சுந்தரபாண்டியன், வீரராஜேந்திர சோழன் உள்பட பல அரசர்கள் இங்கு திருப்பணி செய்துள்ளனர். சுமத்ராதீவு மன்னன் இங்கு வழிபட்டு சூரிய தோஷத்தை நிவர்த்தி செய்ததாக கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சமீப காலமாகத்தான் சென்னையில் உள்ள இந்த சூரிய தலம் பக்தர்களிடம் பிரபலமாகி வருகிறது. சூரியனார் கோவிலுக்கு இணையான தலம் என்பதால் அங்கு செல்ல இயலாதவர்கள் இத்தலத்திலேயே பரிகார பூஜைகளை செய்யலாம்.

Monday, January 21, 2013

திருக்கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாள் ஆலயம்


ஸ்தல வரலாறு


திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூரில் ஹரசாப விமோசனப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. 108 திவ்விய தேசங்களில் ஒன்று, பஞ்ச கமல தலங்களில் ஒன்று என புராணப் பெருமைகள் பல கொண்ட அற்புதமான ஆலயம் இது. ஸ்ரீபிரம்மாவின் சிரசைக் கொய்ததால் விளைந்த சாபத்தில் இருந்து விடுபடுவதற்காக சிவபெருமான் இங்கு தவமிருந்தார். அவரின் சாபத்தை திருமால் போக்கி அருளினார்.

எனவே இந்தத் தலத்து பெருமாளுக்கு, ஸ்ரீஹர சாப விமோசனப் பெருமாள் எனும் பெயர் உண்டானது. தாயாரின் திருநாமம் - ஸ்ரீகமலவல்லித் தாயார், தாயாருக்கு வெள்ளிக்கிழமை தாமரைப் பூக்கள்சார்த்தி, பாயச நைவேத்தியம் செய்து வணங்கிளால், விரைவில் பிள்ளை வரம் கிடைக்கும். ஸ்ரீஆண்டாள், ஸ்ரீஅனுமன், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீசக்கரத்தாழ்வார் ஆகியோர் தன்சந்நிதிகளில் அருள்கிறார்கள்.

ஒவ்வொரு சனிக்கிழமையும் ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறும். தொடர்ந்து 11 வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் இங்கு வந்து, ஸ்ரீசக்கரத்தாழ்வாரை தரிசித்தால், சகல தோஷங்களும் விலகும். அவரின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று நிம்மதியும், சந்தோஷமும் பொங்க வாழலாம் என்பது ஐதீகம். ஆனி மாத சித்திரை நட்சத்திர நாளில், ஸ்ரீசுதர்சன வழிபாடு இங்கு வெகு விமரிசையாகக் கெண்டாடப்படுகிறது.

இந்த வைபவத்தில் கலந்து கொண்டு ஸ்ரீசக்கரத்தாழ்வாரை மனமுருகப் பிரார்த்திக்க வீட்டில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஐதீகம். நல்ல வேலை கிடைக்கவில்லையே என வருந்துவோர் திருமணம் கைகூடவில்லையே என்று ஏங்குவோர், வியாழன் அல்லது சனிக்கிழமைகளில் (தொடர்ந்து 16 வாரங்கள்) இந்தத் தலத்துக்கு வந்து முல்லைப் பூமாலை சார்த்தி, அர்ச்சனை  செய்து வழிபட்டால், விரைவில் நல்ல உத்தியோகம் கிடைக்கும்.

நல்ல வரன் அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. புதன் மற்றும் சனிக்கிழமைகளில், ஸ்ரீஹரசாப விமோசன பெருமாளுக்கு தாமரை தலர்கள் சார்த்தி, ஸ்ரீசக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால்.. குடும்பத்தில் நிலவுகிற பிரச்சினைகள் உடனே நீங்கிவிடும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். அமாவாசை நாளில் இங்கு வந்து நெய் தீபமேற்றி வணங்கிளால், தோஷங்கள் நீங்கி, தோஷம் பொங்க வாழ்வார்கள் என்பது உறுதி.

கோமாதா அந்தாதிப் பாடல்


திங்கட் பசுவின் மனம் நாறும் சீரடி
சென்னி வைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா
எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்து
மோதரங் சுக்கடலுள்
வெங்கட் பணியணை மேல் துயில் கூறும்
விழும் பொருளே.

காஞ்சீபுரம் வரதராஜர் ஆலயம்


ஸ்தல வரலாறு

காஞ்சீபுரத்தில் உள்ள புகழ் பெற்ற வரதராஜர் ஆலயம் 2000 ஆண்டுகள் முந்தைய பழமையான தலம்.பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம்.  இங்குள்ளபெருமாளை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம் குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும் சக்கரத்தாழ்வார் எனப் பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் இருக்கும் பெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது.வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது.

வாழ்வில் வளமும் நிம்மதியும் கிடைக்கிறது என அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள். தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால் பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தீர்கின்றன.

குழந்தை வரம் வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர் இவ்விடத்தில் தங்கபல்லி வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரியன் சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோசங்களும் கிரகண தோசங்களும் விலகி ஷேமம் உண்டாகும்.

நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம். புத்திரதோஷம் உள்ள வர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள். பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், தாயாருக்கு புடவை சாத்துதல், மற்றும் சர்க்கரைப் பொங்கல் பெருமாளுக்கு படைத்தல் ஆகியவை இங்கு நேர்த்திகடன்களாக இருக்கின்றன.

அனந்தசரஸ் தீர்த்தக்கரையில் சக்கரத் தாழ்வார் சன்னதி இருக்கிறது. இங்குள்ள உற்சவர் சக்கரத்தாழ்வார் மிகவும் விசேஷமானவர். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன. வல்லபாச்சாரியார் என்ற பக்தர் இங்கு சுவாமிக்கு, மூங்கில் குழாய் கொண்டு தயாரித்த இட்லியை படைத்து வழிபட்டார்.

இதுவே, "காஞ்சிபுரம் இட்லி' எனப் பெயர் பெற்றது. அரிசி, உளுந்து, மிளகு, சீரகம், சுக்கு, உப்பு மற்றும் நெய் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த இட்லியை காலை 6 மணி பூஜையின்போது நைவேத்யம் செய்கின்றனர். பங்குனியில் பல்லவ உற்சவம் 7 நாள் நடக்கும். இந்நாளில் சுவாமியை நூறு கால் மண்டபத்தில் எழச்செய்து, குங்குமப்பூ தீர்த்தம், சந்தனம் சேர்ந்த கலவையைப் பூசி, ஈரத்துணியை அணிவிப்பர்.

பின்பு, சுவாமியை மாந்தளிர் மீது சயனிக்கச் செய்து, 7 திரைகளைக் கட்டி பூஜை செய்வர். சுவாமிக்கு கோடை வெப்பத்தின் தாக்கம் இல்லாதிருக்க, அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக இவ்வாறு செய்கிறார்கள்.

* உற்சவருக்கு, "அழைத்து வாழ வைத்த பெருமாள்' என்ற வித்தியாசமான பெயர் இருக்கிறது.

* கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள்கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

* வைகாசி பிரம்மோற்ஸவம், ஆனி சுவாதி மற்றும் ஆடி கஜேந்திர மோட்ச நாட்களில் சுவாமி கருடசேவை காண்கிறார்.

* ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

* காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

பிரம்மா தன்மனம் பரிசுத்தமாவதற்கு காஞ்சியில் யாகம் செய்தார். அவ்வமயம் அவருடைய பத்தினியாகிய சரஸ்வதியை விடுத்து மற்ற இரு மனைவியராகிய சாவித்திரி, காயத்திரி ஆகியோருடன் இருந்து யாகம் செய்யத் தொடங்கினர்.அதனை அறிந்த சரஸ்வதி மிகவும் கோபம் கொண்டு வேகவதி என்ற ஆறாய் வந்து யாகத்தை அழிக்க முயற்சி செய்தாள்.

பிரம்மாவின் வேண்டுகோளின் படி மகாவிஷ்ணு யதோத்தகாரியாக வந்து பிறந்த மேனியாக குறுக்கே சயனித்துக் கொண்டார்.பிரம்மாவின் யாகம் பூர்த்தியான உடனே யாக குண்டத்திலிருந்து புண்ணியகோடி விமானத்துடன் பெருமாள் தோன்றினார். பின்பு, பிரம்மா அத்திமரத்தில் ஒரு சிலை வடித்து இங்கே பிரதிஷ்டை செய்தார்.

வேண்டும் வரம் தருபவர் என்பதால் இவர், "வரதராஜர்' எனப் பெயர் பெற்றார். வரதராஜ பெருமாளின் தேவிக்கு பெருந்தேவி என்றுபெயர். 24 நான்கு படிகள் ஏறி அத்திகிரியை அடைய வேண்டும்.மிகப்பெரும் அத்திமரத்தால் ஆன பழைய அத்திவரதராஜ பெருமாள் சயன நிலையில் வைக்கப்பட்டுள்ளார்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்பெருமானின் திருமேனியை வெளியே கொண்டு வந்து தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.*

கதிர் நரசிங்கர் ஆலயம்


ஸ்தல வரலாறு

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டிப்யார்பட்டி அருகில் கொத்தபள்ளியில் கதிர் நரசிங்கர் ஆலயம் உள்ளது. இத்தல இறைவன் பத்மம் விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார்.பிரகாரத்தில் வடக்கு நோக்கிய வீர ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது சிலை ஒரே கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டிருப்பது சிறப்பான அமைப்பு.

இத்தலத்திலிருந்து சற்று தூரத்தில் உள்ள குன்றின் மீது கோபிநாதர் (கிருஷ்ணர்) கோயில் இருக்கிறது.கிருஷ்ண ஜெயந்தி விழாவின்போது, அக்கோயிலில் இருந்து கிருஷ்ணர், இங்கு எழுந்தருளி உறியடி உற்சவம் காண்பார். திருமணம், புத்திர தோஷங்கள் நீங்க சுவாமிக்கு எலுமிச்சை, துளசி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

ஒரே சன்னதியில் சிவன், பெருமாள்: மூலஸ்தானத்தில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சங்கு, சக்கரம் ஏந்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இடது கையை இடுப்பில் வைத்திருக்கிறார். இவர் நரசிங்கப்பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், நரசிம்ம முகம் கிடையாது. சாந்த மூர்த்தியாகவே காட்சி தருகிறார்.

கருவறை மற்றும் கோஷ்டச் சுவருக்கு இடையே மூலஸ்தானத்தை மட்டும் வலம் வரும் வகையில் உள்பிரகாரம் ஒன்றுள்ளது.இது மிகவும் புராதனமான கோயில்களில் மட்டுமே காணப்படும் அமைப்பாகும். சன்னதி எதிரில் கருடாழ்வார் தனிச்சன்னதியில் இருக்கிறார். மூலஸ்தானத்தில் பெருமாளுக்கு அருகிலேயே சிவலிங்கம் இருக்கிறது.

முதலில் பெருமாளுக்கும், அடுத்து சிவனுக்கும் பூஜை செய்கிறார்கள். சிவனுக்குரிய பரிவார மூர்த்தியான பைரவர் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். தேய்பிறை அஷ்டமி நாட்களில் இவருக்கு விசேஷ பூஜை உண்டு. இத்தலத்தில் அருளும் பெருமாளுக்கு, கத்ரிநரசிங்கர் என்றும் பெயருண்டு.

கத்ரி என்பது சூரியனின் அதிகபட்ச ஒளியைக் குறிக்கும் பெயராகும். இத்தலத்து பெருமாள், சூரியன் தொடர்பான தோஷங்களை நீக்குபவராக அருளுவதால் இப்பெயரில் அழைக்கப்படுகிறார்.ஜாதகத்தில் சூரியதசை இருப்பவர்கள், அக்னி நட்சத்திர நாட்களில் பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள்.சுவாமிக்கு வலப்புறம் கமலவல்லி தாயார் சன்னதி இருக்கிறது.

குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற, இங்குள்ள லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். சக்கரத்தாழ்வார் தனிச் சன்னதியில் பதினாறு கரங்களுடன், அக்னி ஜூவாலை கிரீடம் அணிந்த நிலையில் காட்சி தருகிறார். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகளின் சிற்பம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

சக்கரத்தாழ்வாருக்கு மேலே இரணியனை சம்ஹாரம் செய்த நரசிம்மரும், பாதத்திற்குக் கீழே இருபுறமும் கருடாழ்வார் வணங்கியபடி இருக்கும் லட்சுமி நரசிம்மரும் காட்சியளிக்கின்றனர்.

சக்கரத்தாழ்வார் பின்புறமுள்ள யோக நரசிம்மர், நான்கு கைகளிலும் சக்கரம் ஏந்தியிருக்கிறார்.குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பாக, இவரது சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் அவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெறுவர் என நம்புகிறார்கள்.

பசுவந்தனை கோவில்


தலச்சிறப்பு

       பசுவந்தனை திருத்தலம், தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். இவ்வூர் மதுரை-நெல்லை ரெயில்வே வழியில் கடம்பூர் ரெயில் நிலையத்திலிருந்து கிழக்கே 10 கிலோ மீட்டர் தூரத்திலும், மதுரை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில், கயத்தாறில் இருந்து கிழக்கே 21 கி.மீ. தூரத்திலும், தூத்துக்குடி-மதுரை நெடுஞ்சாலையில் எப்போதும் வென்றானிலிருந்து மேற்கே 11 கி.மீ. தூரத்திலும் அமைந்து உள்ளது.

சிறப்புமிக்க இத்தலம் பசுவந்தனை அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலாகும். முழுவதும் கல்லினால் கட்டப்பட்டுள்ள திருக்கோவிலாகும். இத்திருக்கோவில் இரண்டாம் மாறவாமன் சுந்தரபாண்டியனின் ஏழாம் ஆட்சி காலத்தில் கி.பி.1245-ல் கட்டப்பட்டது எனவும் ஆலால சுந்தரப் பெருமாள் என்பவன் சிவனுக்கு கோவில் எழுப்பி நிலங்களை அளித்தான் எனவும், இத்தலத்திற்கு முதுகுடி நாட்டு பசுந்தலை, பவித்திர மாணிக்கப்புரம் என்ற பெயர்களும் உண்டு.

காசியில் சிறந்தது கயிற்றாறு என்னும் புண்ணிய நாடு. அதனை ஆண்டு வந்த மன்னன் ஆநிரைகளைப் போற்றி வந்தான். பசுக்கூட்டங்கள் மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் தினமும் புல் மேய்வது வழக்கம். அந்த  பசுக்கூட்டத்தில் ஒரு பசு அங்குள்ள ஒரு குளத்தில் நீராடி வில்வ மரத்தடியில் இருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது பாலைச் சொரிந்து விட்டு பின்னர் பசுக்கூட்டத்தில் வந்து சேர்ந்து விடும். தினமும் இந்த நிகழ்ச்சியால் பால் குறைவதை அறிந்த மன்னன் காவலர்களை அனுப்பி உண்மையைக் கண்டறிந்தான்.

இறையுணர்வு மிக்க தனது பசுபால் சொரியும் இடத்தை சென்றடைந்த மன்னன் அங்கிருந்த சிவலிங்கத்தைக் கண்டு பணிந்து வணங்கினான். இரவு படையுடன் அங்கு தங்கியிருந்த மன்னன் வானவர்கள் வந்து அந்த சிவலிங்கத்தை அர்ச்சித்து வழிபாடு செய்ததைக் கண்டு மெய் உருகி வழிபட்டான். பசுபால், சொரிந்து வானவர்கள் வழிபட்ட சிவலிங்கத்திற்கு அந்த இடத்திலேயே ஆலயம் ஒன்று எழுப்ப முனைந்தான்.

அதன்படி அந்த இடத்தில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத கைலாசநாதருக்கு சிறியதாக ஓர் ஆலயம் அமைத்து அதனைச்சுற்றி முறைப்படி வீதிகள் அமைத்தான். நகரமாக ஆக்கினான். பசு அருகில் வந்து பால் சொரிந்து வளர்த்ததும் வானவர்கள் வந்து தினமும் வழிபட்ட சிவலிங்கங்கள் உள்ள இத்திருத்தலம் பசுவந்து அணை எனப் பெயர் பெற்று பின்னர் பசுவந்தனை என அழைக்கப் பெறலாயிற்று.

பசு வந்து நீராடிய குளம் சிவதீர்த்தம் என்றும் கோசிருங்காவாவி என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருத்தல மூர்த்தியின் சிறப்பை உணர்த்தும் உண்மைச் சம்பவம் ஒன்று உள்ளது. எட்டையபுரத்திற்கு அருகிலுள்ள தெற்கு முத்தலாபுரம் என்ற கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பாநாயக்கர் என்பவர் நன்றாக இருந்த அவரது இரு கண்களும் பார்வையை இழந்து விட்டன.

அவர் இத்திருத்தலத்து இறைவன் மீது கொண்ட பக்தியினால் கோவிலுக்கு வந்து தினசரி வாவியில் நீராடி ஈசனை வழிபட்டு 41 நாட்கள் மணசோறு உண்டு விரதமிருந்தார். 42-வது நாள் அவரது இரு கண்களும் இறையருளால் பார்வை வரப்பெற்றன. இந்நிகழ்ச்சியினால் இத்தலத்து இறைவன் இப்பகுதி மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார்.

பசுவின் பாலை அருந்தி வளர்ந்த சுவாமிக்கு பசும்பால் அபிசேகம் செய்து வழிபட்டால் வேண்டுதல்கள் உடனடியாக நிறைவேறி வருகிறது என்பதால் இëத்தலமூர்த்திக்கு அன்பர்களால் தினசரி பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. இத்திருக்கோவில் முன்பு சங்குச்சாமி சித்தர் `ஜீவ சமாதி' அமைந்துள்ளது. பழமையும் சிறப்பும் மிக்க கோசிருங்கவாளி தீர்த்தத்தில்தான் ஆதிகாலத்தில் இறையுணர்வு மிக்க பசு ஒன்று தினசரி நீராடி பால் சொரிந்ததால்தான் இத்தலத்திற்கு பசுவந்தனை என்ற பெயர் ஏற்பட்டது.

இந்த தீர்த்தம் கங்கை நீரைப்போல புனிதமாகக் கருதப்படுகிறது. ஆண்டு தோறும் சித்திரை புதுவருட தினத்தன்று இவ்வூர் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இருந்து மக்கள் வந்து கூடி இத்திருக்குளத்தில் புனித நீராடி இறைவனை வழிபட்டு இறைவன் முன்பு புதிய பஞ்சாங்கத்தை சமர்ப்பித்து புத்தாண்டு பொலிவுடன் விளங்கவும், விவசாயம் சிறக்கவும் வேண்டுகின்றனர்.

கண்ணகை அம்மன் கோவில் – வரலாறு




கண்ணகை அம்மன் கோவில் – வரலாறு (அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள்)


         மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பூவரசு) ஆகியவை ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆலயமாக விளங்குவது கண்ணகையம்மாள் என வழங்கும் அருள்மிகு ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலயம் ஆகும்.

இவ்வாலயம் புங்குடுதீவு தெற்குக் கடற்கரை மணற்பரப்பில் ஏறக்குறைய ஆயிரம் பரப்பு நிலத்தில் அமைந்துள்ளது. வேண்டுவார் வேண்டுவதை வழங்கி அருள்புரியும் அன்னையாம் கண்ணகையம்மன் கோவில் கொண்டுள்ள இவ்வாலயத்தின் சிறப்பு சொல்லில் அடங்காததாகும். 1931 ம் ஆண்டு இக்கோயில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று, இக்கோயிலின் முதல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இக்கோயிலின் கருவறையில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாளும், இரண்டாம் மண்டபத்தில் வடக்குப் புறத்தில் தெற்கு முகமாக, தெற்கு வாசலின் ஊடாகச் சமுத்திரத்தை நோக்கியபடி ஸ்ரீ கண்ணகி அம்பாளும் பிரதிஷ்டை செய்யப்பட்டனர்.1944 ம் ஆண்டு இக்கோயிலின் இரண்டாவது கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

வல்லன்பதி இலுப்பண்டைநாச்சியார் ஆலயத்தின் புளியமரத்தில் பள்ளி கொண்டிருக்கும் நாகபாம்பு கண்ணகியம்மன், நயினை நாகபூஷணியம்மன், புளியங்கூடல் முத்துமாரியம்மன் ஆலய உற்வச காலங்களில் அம்மனுக்கு வாயினால் பூ எடுத்துச் செல்வதாக கண்ணால் கண்டவர்கள் கூறுகின்றனர். 1957 ம் ஆண்டு சுண்ணாம்பு கட்டிடம் முழுவதும் அழிக்கப்பட்டு நிரந்தர கட்டிடம் அமைக்கப்பட்டு, 1964 ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

1957 ம் ஆண்டு புதிய ராஜகோபுரம் மற்றும் சித்திரத்தேர் பணிகள் நடைபெற்றன. வரலாற்று சிறப்பு மிக்க சிலப்பதிகாரப் பெருவிழா நடத்தப்பட்ட சிறப்பு இக்கோயிலுக்கு உண்டு. கண்ணகி அம்பாளின் தேர்த்திருவிழாவான சித்திரா பவுர்ணமி தினத்தில் கனடாவிலுள்ள ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்திலும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.    

ஆல‌ய‌ அமைப்பு

இவ்ஆல‌ய‌மும் ஏனைய‌ ஆல‌ய‌ங்க‌ளைப்போல‌வே ஆக‌ம‌ விதிமுறைப்ப‌டி அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. க‌ருவ‌றைக்கு மேலே அழ‌கிய‌ விமான‌ம் க‌ண்ண‌கி வ‌ர‌லாற்றுச்சிற்ப்ங்க‌ளோடு அமைந்துள்ள‌து. இதைவிட‌ க‌ண்ண‌கியின் வ‌ர‌லாற்றைக்கூறும் ஓவிய‌ங்க‌ள் ஆல‌ய‌ உள் வீதியில் அழ‌குற‌ வ‌ரைய‌ப்ப‌ட்டுள்ள‌ன‌. ப‌ரிவார‌ மூர்த்திக‌ளாக‌ பிள்ளையார், முருக‌ன், வைரவ‌ர் என உள் வீதியில் த‌னித்த‌னி ஆல‌ய‌ங்க‌ள் உள்ள‌ன‌.

Saturday, January 19, 2013

சிதம்பர ரகசியம்...


சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும்.

மார்ச் 10,சிவராத்திரி.இருக்கும் இடத்திலிருந்து பங்குகொள்வீர்,
http://tamilnadutemplehistory.blogspot.com/ 
*****சிதம்பர ரகசியம்*****
சித் (அறிவு), அம்பரம் (வெட்டவெளி) என்ற இரு சொற்களின் கூட்டே சிதம்பரம் என்பதாகும். எனவே இந்த தலம் ஞானா காசம், சிற்றம்பலம், தில்லைவனம் என்ற பெயர்களால் சிறப்பிக்கப்படுகிறது.

சிதம்பர ரகசியம் என்பது சிதம்பரத்தில் மிக முக்கியமானதாகும். சித்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில். இதில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் இல்லை. தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும்.

மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.

அகண்ட பெருவெளியில் நிறைந்திருக்கும் இறைவனை வெறும் வெளியையே காட்டி இங்கு வழிபட வகை செய்யப்பட்டுள்ளது. இதுவேதான் சிதம்பர ரகசியம் என அனைவராலும் போற்றி வழிபாடு செய்யப்படுகின்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றுக்கு ஒரு மிகச் சிறந்த தலம் சிதம்பரம் என்ற தில்லையாகும்.

ஆருத்ரா தரிசன நாளில் அவனே அவனே என்று கூறாமல், சிவனே சிவனே என்று கூறி வாழ்த்தி வணங்கி எல்லா நலமும் பெறுவோமாக!

திருவையாறு திருப்புகழ்!!


திருவையாறு திருப்புகழ்
அருணகிரிநாதர்

சொரியு மாமுகிலோஇருளோ குழல்
சுடர்கொள் வாளிணையோ பிணையோ விழி
சுரர்தம் ஆரமுதோ குயிலோ மொழி இதழ்கோவை
துவரதோ இலவோ தெரியா இடை
துகளிலாவனமோ பிடியோ நடை
துணைகொள் மாமலையோ முலை தானென உரையாடிப்

பரிவினால் எனை ஆளுக நானொரு
பழுதிலான் எனவாணுத லாரொடு
பகடியே படியா வொழியாஇடர் படுமாயப்
பரவி மீதழியா வகைஞானிகள்
பரவுநீள் புகழேயது வாமிகு
பரமவீடது சேர்வது மாவது மொரு நாளே

கரிய மேனியனானிரை யாள்பவன்
அரிய ராவணை மேல்வளர் மாமுகில்
கனகன் மார்பது பீறிய வாளரி கனமாயக்
கபடன் மாமுடியாறுடனாலுமொர்
கணையினால் நிலமீதுற நூறிய
கருணை மால்கவி கோப க்ருபாகரன் மருகோனே

திரிபுராதிகள் தூளெழ வானவர்
திகழவே முனியாவருள் கூர்பவர்
தெரிவை பாதியர் சாதியிலாதவர் தருசேயே
சிகர பூதர நீறுசெய் வேலவ
திமிர மோகர வீர திவாகர
திருவையாறு உறை தேவ க்ருபாகர பெருமாளே!

பூஜையறையில் லிங்கம்!!!!


பூஜையறையில் லிங்கம் வைத்து வழிபடுவோர் ஏராளமாக இருக்கிறார்கள்.
***http://tamilnadutemplehistory.blogspot.com/ ***
லிங்கம் வைத்து வழிபடும்போது, மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

கழிவறை படுக்கை அரை இருக்கும் கட்டிடத்தில் லிங்கம் இருக்கவே இருக்ககூடாது.

அவசியம் தனி கட்டிடத்தில்தான் வைக்கவேண்டும்

அப்படி தனி இடத்தில் இருக்கும் லிங்கத்திற்கு ஆண்கள் சிறுமியர்கள் அல்லது வயதான பெண்கள் சுத்தமாக தினம் விளக்கேற்றி தண்ணிரிலாவது அபிஷேகம் கட்டாயம் செய்ய வேண்டும்.

நாம் என்ன எண்ணத்துடன் லிங்கத்தை வணங்குகிறோமோ, அதற்குரிய பலனே நமக்கு கிடைக்கும்.

நம் எதிரிக்கு கூட கஷ்டம் வர வேண்டும் என அந்த லிங்கத்திடம் கேட்டால், அது நம்மையே வந்தடையும்.

லிங்க வழிபாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

ஒரு இன்னலோ இடுக்கணோ என்றால், ""நீ பார்த்துக்கொள்'' என்று அந்த கஷ்டத்தையும் அவனிடமே சமர்ப்பித்து விடுங்கள்.

நடவடிக்கை எடுக்க வேண்டியது அவன் பொறுப்பு.
லிங்கத்தின் முன்னால் நின்று வீட்டுக்கும், நாட்டுக்கும் நன்மையை மட்டும் கேளுங்கள்.

மேலும் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை எடுத்து வீட்டில் வைத்து வணங்குவது மிகப்பெரிய தோஷத்தை ஏற்படுத்தும். அந்தக் குடும்பத்தினருக்கு சந்ததி இல்லாமல் போகும், பாரம்பரியம் தழைக்காது.

புண்ணீயம் சம்பாதிக்கும் வழி!

புண்ணீயம் சம்பாதிக்கும் வழி!

திருஞானசம்பந்தர் தேவாரம் 
தலம் : திருச்சாய்க்காடு 
பண் : சீ காமரம் 
இரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

நீ நாளும் நன்னெஞ்சே நினை கண்டாய் யாரறிவார்
சாநாளும் வாழ்நாளும் சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்பப் புகழ் நாமஞ் செவி கேட்ப
நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.

திருச்சிற்றம்பலம்

பொருளுரை

நன்னெஞ்சமே, நீ நித்தலும் எம்பெருமானை நினை!
(ஏனெனில்) யாரே அறிவார் சாகின்ற நாளும்,
வாழ்கின்ற நாளும் எவையென்று?
திருச்சாய்க்காட்டில் உறைகின்ற எம்பெருமாற்குப்
பூவினை நித்தலும் தலை சுமக்கவும்,
புகழ் நாமங்களைக் காது கேட்கவும்,
நாக்கானது நித்தலும் சொல்லிப் பரவவும்
நல் வினையைப் பெறலாம்.

திருவையாறு அய்யாறப்பர் திருகோவில் குடமுழுக்கு விழா

ஓம் நமசிவாய
தென்னாடு உடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!! . ஆரூர் அமர்ந்த அரசே போற்றி சீரார் திருவையார போற்றி போற்றி!!! 
திருச்சிற்றம்பலம்

Sunday, January 13, 2013

வல்லங்குளம் மாரியம்மன் கோவில்

ஸ்தல வரலாறு...... 

நாகப்பட்டினம்-திருவாரூர் பாதையில் நாகையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது வல்லங்குளம் ஸ்ரீமாரியம்மன் திருக்கோவில். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவில் இந்த ஊர் மக்கள் பலரும் கோவிலில் தங்குகின்றனர். மறுநாள் மாரியம்மனை தரிசித்து, வணங்கினால் நினைத்தது நிறை வேறும் என்பது நம்பிக்கை. 

இங்கே மாரியம்மனை மனதார வேண்டி, உளுந்தாலான பலகாரங்களை அம்மனுக்குப் படைத்து, பக்தர்களுக்கு விநியோகிக்கின்றனர். இதனால் அம்மனின் அருளோடு நம்முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும். இது வரை, திதி-தர்ப்பணம் செய்யாதவர்களும், பிதுர் தோஷத்துக்கு ஆளானவர்களும் இங்கு வந்து, `தோசை' முதலான உளுந்தால் ஆன உணவைப் படைத்து, அம்மனை வழிபட்டு பலனடையலாம் என்கிறார்கள். 

இப்படி, இந்த கோவிலின் பரிகார வழிபாடுகள் மட்டுமல்ல மாரியம்மன் இங்கு குடிகொண்ட கதையும் சுவாரஸ்யமானது தான். திருவண்ணாமலையை தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்த வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் வாய்க்கவில்லை. இதனால் வருந்திய மகாராஜா யாகங்கள் நிகழ்த்தி வழிபட்டார். இதன் பலனால் அரசி கருவுற்றாள். ஆனால் விதி வேறுவிதமாக விளையாடியது. 

`இந்த குழந்தை பிறந்தால் நாட்டுக்கு கேடு விளையும்' என்று ஜோதிடர் எச்சரிக்க, கலங்கிப் போன போன மகாராஜா, செய்வதறியாது குழம்பினார். இறுதியில் நாட்டு மக்களின் நலனே முக்கியம் என்று கருதி மனைவியையும், அவள் கருவில் வள ரும் குழந்தையையும் அழிக்கத் திட்டமிட்டார். ஒரு நாள் மனைவி அசந்திருந்த வேளையில் அவளை வெட்டுவதற்கு வாளை ஓங்கினார் மகாராஜா. 

அப்போது, ஆக்ரோஷமாகத் தோன்றினாள் பேச்சாயி அம்மன். மகாராஜாவின் கையில் இருந்த வாளைப் பிடுங்கி எறிந்தாள், அவரைத் தன் காலில் போட்டு மிதித்தாள். அரசியை தன்மடியில் கிடத்தி அவளுக்கு பிரசவம் பார்த்துக் குழந்தையையும், தாயையும் காப்பாற்றினாள், தனது தவறை உணர்ந்த மகாராஜா, பேச்சாயி அம்மனிடம் பாவபரிகாரம் குறித்து வேண்டினார். 

கீவளூரில் ஒரு குளம் வெட்டி பாவத்துக்குப் பரிகாரம் தேடிக்கொள் என்று கட்டளையிட்டாள் அம்மன்.  அதன்படியே செய்தார் மகாராஜா. அவரால் உருவாக்கப்பட்ட குளம் தான் `வல்லங்குளம்' எனப்பட்டது. காலம் உருண்டோடியது ஏறத்தாழ 500-700 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த குளத்தில் இருந்து அம்மன் சிலை ஒன்றை மக்கள் கண்டெடுத்தனர். பிறகு அவர்கள் ஒரு கோவில் கட்டி அம்மனை பிரதிஷ்டை செய்தனர். 

வல்லங்குளத்தில் வெளிப்பட்டவள் ஆதலால் இவளுக்கு ஸ்ரீ வல்லங்குளத்து மாரியம்மன் என்று பெயர். பிரதான சாலையின் இடப்புறம் திருக்குளம், வலப்புறம் திருக்கோவில். இப்போது சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. உள்ளே நுழைந்தால், வலப்பக்கம் ஸ்ரீபேச்சாயி அம்மன், பின்புறம் ஸ்ரீசுப்ரமணியர் சந்நதி. 

நுழைவாயிலில் இருந்து அம்மனை நோக்கி காவலாளியின் தோற்றத்தில் அய்யனார் காட்சி தருகிறார். உள்ளே கிழக்கு நோக்கி கருணையே வடிவாகக் காட்சி தருகிறாள் வல்லங்குளத்து மாரியம்மன். சுற்று வட்டார ஊர்களில் எந்த சுபகாரியமாக இருந்தாலும் இந்த மாரியம்மனுக்குத் தான் முதல் தகவல் தெரிவிக்கின்றனர். 

இந்த பகுதியில், வெகுவிமரி சையாகக் கொண்டாடப்படும் கீவளூர் அஞ்சு வட்டத் தம்மன் ஆலய திருவிழாவின் போதும், முதலில் வீதி உலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவது ஸ்ரீவல்லங்குளத்து மாரியம்மன் தான்.

ராமேசுவரம் கோவில் உருவான வரலாறு


* இலங்கை அரசன் ராவணன், சீதையின் அழகில் மயங்கி, அவளை கடத்தி சென்றான். சீதையை தேடி ராமனும், லட்சுமணனும் அலைந்தனர். அப்போது ராமருக்கு ஆஞ்சநேயர் நட்பு கிடைத்தது. இலங்கையில் சீதை இருப்பதை கண்டுபிடித்த ஆஞ்சநேயர் அவரிடமிருந்து சூடாமணி பெற்று வந்து, அதை ராமரிடம் கொடுத்தார். 

* இலங்கையில் சீதாப்பிராட்டியார் இருப்பதை அறிந்த ராமர் பாலம் கட்டி செல்ல தீர்மானித்தார். இதற்காக தரிபசயனம் என்று கூறப்படும் இடத்தில் சமுத்திர ராஜனை தியானித்தார். ஆனால் அவன் வராதது கண்டு கோபம் கொண்டு வில்லில் நாணை பூட்டி பாணத்தை தொடுத்ததார். இதனால் சமுத்திரராஜன் தோன்றி சரண் அடைந்தான். அவன் ராமரிடம் கடலில் பாலம் கட்ட வழி சொன்னான். 

* சேதுவில் பாலம் கட்டும் பணி தொடங்கியது. பாலம் கட்டுவதை ராமபிரான் பார்த்துக் கொண்டிருக்கும் போது அணில் ஒன்று கடல் தண்ணீரில் உடம்பை நனைத்து அதன்பின் மண்ணில் உருண்டு உடலில் ஒட்டிய மண்ணை பாலம் கட்டுமிடத்தில் கொண்டுபோய் உடலில் உள்ள மண்ணை உதிர்த்து பாலம் கட்ட உதவி செய்தது. அதை ராமர் கவனமாகப் பார்த்தார். 

* ஆஞ்சநேயரும் மற்றும் வானர படை வீரர்களும் கடலில் பாலம் அமைக்க கல், மரம், மலை முதியவற்றைக் கொண்டு வேலை செய்வதை ராமர் தினமும் கண்காணித்தார். அப்போது  அணில் பாலம் கட்ட உதவியதை நினைவில் கொண்டு அணிலின் முதுகில் தன் மூன்று விரல்களால் தடவி கோடு போட்டு அணிலுக்கு திருவருள் புரிந்தார். 

* சேதுவில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதன் வழியாக வானர வீரர்களும் ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயரும் இலங்கைக்குச் சென்றனர். இந்திரனால் அனுப்பப்பட்ட ரதத்தில் ராமர் எழுந்தருளினார். அகஸ்திய முனிவரால் ஆதித்தய ஹிருதய மந்திரம் உபதேசம் பெற்றுக் பிரம்மாஸ்திரத்தினால் ராவணனை அன்றே சம்காரம் செய்து வெற்றி கொண்டார். 

* ராவணன் அழிக்கப்பட்டதை தொடர்ந்து இலங்கையின் புதிய அரசனாக விபீஷ்ணருக்கு ராமர் முடிசூடி பட்டாபிஷேகம் செய்து வைத்தார். பிறகு ராமபிரான் சீதாபிராட்டியருடனும், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயருடனும் அன்ன விமானத்தில் அமர்ந்து கந்த மாதனம் (ராமேஸ்வரம்) வந்து சேர்ந்தார்கள். 

* ராமேஸ்வரம் வந்து சேர்ந்த தண்டகாரன்யத்திலிருந்து வந்த அகஸ்தியரும் மற்றும் ரஷிகளும் ராமபிரானை சந்தித்து வணங்கினார்கள். ராமர் அகஸ்தியரிடம் ராவணனை கொன்றதால் தனக்கு நேர்ந்த பிரம்மஹத்தி தோஷம் போக வழி செல்லுமாறு கேட்டார். மகரிஷிகள், இந்த இடத்தில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகி, பாவம் நீங்கும் என்று கூறினார். 

* அகத்திய முனிவர் சொன்னபடி ராமேஸ் வரத்தில் சிவபூஜை செய்வதற்காக ராமர் எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பிறகு அவர் ஆஞ்சிநேயரிடம், கைலாசம் சென்று சிவலிங்கம் கொண்டு வருமாறு உத்தரவிட்டார். 

* ஆஞ்சநேயர் புறப்பட்டு சென்ற பிறகு சீதாப்பிராட்டியார் ராமேஸ்வரத்தில் கடற்கரையில் விளையாட்டாக மண்ணில் சிவலிங்கம் ஒன்று செய்தார். அதை ராமரும் லட்சுமணரும் பார்த்து வியந்தனர்.'' கயிலைக்குச் சிவலிங்கம் கொண்டுவரச் சென்ற ஆஞ்சநேயர் வெகுநேரமாகியும் வரவில்லை. இதனால் ராமர் பூஜை செய்வதற்கு தாமதம் ஏற்பட்டது. அப்போது அகத்திய முனிவர், "குறிப்பிட்ட நல்லநேரம் வந்துவிட்டது சீதாப்பிராட்டியார் விளையாட்டாக செய்த மண் லிங்கத்திற்கு பூஜை செய்யுங்கள்'' என்றார். 

* அகத்தியர் சொன்னதை ஏற்று ராமபிரான் சீதாபிராட்டியார் மண்ணில் செய்த சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து ஆகம முறைப்படி பிரதிஷ்டை செய்து தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபிரானை பூஜை செய்தார். வானில் சிவபெருமான் உமாதேவியாருடன் தோன்றி "ராகவர்'' தனுஷ்கோடியில் ஸ்நானம் செய்து, நீர் பிரதிஷ்டை செய்த இந்த லிங்கத்தைப் பார்ப்பவர்கள் செய்த எல்லா பாவங்களும் தொலைந்து போகும் என்றும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும் என்று அருளி மறைந்தார். ராமர் பூஜை செய்தபடியால் இந்த சிவலிங்கத்திற்கு ராமலிங்கம் என்றும், இந்த ஊருக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் வந்தது. 

* இதற்கிடையே ஆஞ்சநேயர் கயிலை சென்று சிவனை எங்கு தேடியும் கிடைக்காததால் சிவனை நினைத்து கடுந்தவம் புரிந்தார். சிவன் தாமதமாக தரிசனம் தந்தார். ஆஞ்சநேயர் தான் வந்த காரணத்தைக் கூறி சிவனிடமிருந்து இரண்டு சிவலிங்கங்களைப் பெற்றுக் கொண்டு வேகம், வேகமாக ராமேஸ்வரம் நோக்கி திரும்பினார். 

* ஆஞ்சநேயர் கயிலையிலிருந்து கொண்டு வந்த சிவலிங்கங்களை ராமரிடம் கொடுத்தார். அப்போது அவருக்கு தான்வரும் முன்பே சீதாப் பிராட்டியாரால் மண்ணில் சிவலிங்கம் செய்து ராமர், பூஜை செய்து விட்டதை அறிந்தார். ஆஞ்சநேயருக்கு கோபம் வந்தது. அதே சமயம் ஆஞ்சநேயர் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை, ராமபிரான் பூஜை செய்ய முடியாமைக்கு வருத்தமடைந்தார். ஆஞ்சநேயரிடம் ராமர் பலவாறு ஆறுதல் கூறி, முடிந்தால் இந்த லிங்கத்தை அகற்றிவிட்டு நீர் கொண்டு வந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்யும்படி சொன்னார். 

* ராமபிரான் சொன்னபடி மண் லிங்கத்தை அகற்றிவிட்டு, தான் கயிலையிலிருந்து கொண்டு வந்த லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் எண்ணம் கொண்டு தன் கைகளால் மண்லிங்கத்தை பெயர்த்தெடுக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த பயனில்லாமல் போகவே தன் வாலால் லிங்கத்தை கட்டி இழுக்க முயற்சி செய்தார். அதிலும் அவர் தோல்வி அடையவே ராமர் பிரதிஷ்டை செய்த மண் லிங்கத்தின் பெருமையை உணர்ந்தார். 

* இதைத் தொடர்ந்து தான் கொண்டு வந்த லிங்கங்கள் பூஜைக்கு பயன்படுத்தப் படவில்லையே என்று ஆஞ்சநேயர் மீண்டும் வருந்தினார். ராமர், சீதை, லட்சுமணரிடம் அவர் தன் கவலையை வெளியிட்டார். 

* ஆஞ்சநேயர் வருத்தத்தை போக்க ராமர் முடிவு செய்தார். அவர் ஆஞ்சநேயரிடம், நீர் கொண்டு வந்த லிங்கத்தை, நான் பிரதிஷ்டை செய்த ராமலிங்கத்திற்கு வடபுறத்தில் பிரதிஷ்டை செய்யும். நீர் வைத்த சிவலிங்கத்துக்குத் தான் முதல் மரியாதை செய்யப்படும். அந்த லிங்க தரிசனம் செய்த பின்தான் சீதை உருவாக்கிய ராமலிங்கத்தை தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆணையிடுகிறேன் என்று கூறி அருளினார். ராமேசுவரம் கோவிலில் இன்றும் இம்முறையே பின்பற்றப்படுகிறது.